5 நாள் லீவில் குழந்தைகளுக்கு என்ன செய்துகொடுப்பது என்று யோசிக்கிறீங்களா..? இதோ உங்களுக்காக சூப்பர் ரெசிபி

Share

மிலாடி நபி, காந்தி ஜெயந்தி, சனி, ஞாயிறு விடுமுறையோடு சேர்த்து வெள்ளி 1 நாள் விடுப்பு சேர்ந்து பள்ளி கல்லூரி என்று பெரும்பாலான நிறுவனங்களில் 5 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் வீட்டில் இருக்கும் இந்த நீண்ட விடுமுறையில் குழந்தைகளுக்கு ஏதாவது அடிக்கடி செய்து தர வேண்டி இருக்கும்.

வீட்டில் இருக்கும் போது விளையாட்டு அதிகம் ஆகும். அதனால் குழந்தைகளுக்கு பசியும் அதிகம் ஆகும். அதனால் குழந்தைகள் பசிக்கிறது என்று சாப்பிட கேட்கும்போது ஆரோக்கியம் காரணமாக பழங்களை சாப்பிடச் சொன்னால், அதை ஒதுக்கிவிடுவார்கள். அவர்களுக்கு பிஸ்கட் கேக் போன்ற பொருட்கள் தான் சாப்பிட பிடிக்கும்.

ஆனால் குழந்தைகள் ஆரோக்கியம் குறித்து நாம் பயப்படுவோம். அதற்கான ஒரு ரெசிபி ஐடியாவை தான் இப்போது உங்களுக்கு சொல்ல இருக்கிறோம். இந்த பழங்களை அவர்களுக்கு கேக்களில் சேர்த்து கொடுத்தால் அவர்களுக்கு பிடித்த அதே நேரம் ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் கொடுத்த திருப்தி இருக்குமல்லவா?சரி ரெசிபிக்குள் போவோம்..

வாழைப்பழ பான்கேக் செய்யத் தேவையான பொருட்கள்

  • 1 கப் மைதா
  • 4 தேக்கரண்டி வெள்ளை சர்க்கரை
  • 1/2 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
  • உப்பு ஒரு சிட்டிகை1 முட்டை
  • 1 1/2 கப் பால்
  • 25 மில்லி எண்ணெய்
  • 1 வாழைப்பழம், பிசைந்தது
  • 1/2 தேக்கரண்டி வெண்ணிலா எசன்ஸ்
  • 1 டீஸ்பூன் தேன்
  • 1 தேக்கரண்டி வெண்ணெய்

வாழைப்பழ பான்கேக் செய்முறை 

ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அடித்து, அதனுடன் வெண்ணெய், தேன் மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்க்கவும். அதை அனைத்தையும் நன்றாக அடித்து கலக்கிக்கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் மசித்த வாழைப்பழத்தை சேர்க்கவும். நன்றாக கலக்கு.

இப்போது தனியாக ஒரு சல்லடையில் மைதா  மாவு மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து நன்றாக சலிக்கவும். பின்னர் இதை முன்னர் ரெடி பண்ணிய நீர்மக்கலவையில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலக்கவும். மொத்தமாக கொட்டினால் கட்டிகள் விழும். கட்டிகள் எதுவும் உருவாகாமல் இருக்க நன்றாக பொறுமையாக  கலக்கவும்.

பின்னர் இந்த கலவையில் பால் சேர்த்து ஒரு மென்மையான பேஸ்ட் வரும்  வரை கிளறவும். இப்போது ஒரு கடாயை சூடாக்கி, ஒவ்வொரு கேக்கிற்கும் தோராயமாக 1/4 கப் எடுத்து அதை கடாய் மீது  மீது ஊற்றவும் .அப்பத்தை போல திக்காக ஊற்றி அதை வேகா விடவும்.

இதையும் பாருங்க : உங்க குழந்தை பீட்ரூட் சாப்பிட மாட்டேங்குதா..? இப்படி செஞ்சு கொடுங்க.. மிச்சம் வைக்காம சாப்பிடுவாங்க..!

பின்னர் அதை பிரட்டி போட்டு இருபுறமும் பொன்னிறமாகும் வரை சமைக்கவும். மேலே வெட்டப்பட்ட வாழைப்பழத் துண்டுகளுடன் கிரீம், ஐஸ்கிரீம், பீனட் பட்டர், நட்ஸ் அல்லது மேப்பில் சிரப் ஊற்றி பரிமாறலாம். முடிந்தால் வாழைப்பழத்தை வைத்தே ஒரு சாஸ் செய்து அதனோடு பரிமாறுங்கள்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com