விநாயகர் சதுர்த்தி என்றாலே படையலில் கொழுக்கட்டை கட்டாயம் இடம் பெறும். ஏனெனில் அது விநாயகருக்கு பிடித்த உணவு என்பதால் அதைதான் பிரதானமாக வைத்து படைப்பார்கள். கொழுக்கட்டையிலேயே பல வகைகள் உள்ளன. பிடி கொழுக்கட்டை, பூரண கொழுக்கட்டை, தேங்காய் கொழுக்கட்டை, பால் கொழுக்கட்டை என கொழுக்கட்டையின் அத்தனை வகைகளையும் இலையில் வைத்து பிரசாதமாக படைப்பார்கள். அப்படி நீங்களும் பால் கொழுக்கட்டை செய்ய திட்டமிட்டால் ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க. இதோ ரெசிபி…
தேவையான பொருட்கள்
அரிசி மாவு – 1 கப்
தேங்காய் – 1/4 கப்
வெல்லம் – 1/2 கப்
தேங்காய் பால் – 1/2 கப்
நெய் – 3 ஸ்பூன்

செய்முறை :
அரிசி மாவில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பிசைவது போல் பிசைந்து கொள்ளுங்கள். பின் உருட்டிய மாவில் பாதியை தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்து மீதம் உள்ள மாவில் துருவிய தேங்காய், இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள். பின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளுங்கள்.
அடுத்ததாக கடாயில் வெல்லம் போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி பாகு செய்யுங்கள். வெல்லம் நன்கு உருகியதும் வடிகட்டிக் கொள்ளுங்கள்.
பின் மீண்டும் கடாயில் ஊற்றி உருட்டி வைத்துள்ள உருண்டைகளை பாகில் சேர்த்து கொதிக்க வையுங்கள். 5 நிமிடத்தில் உருண்டைகள் வெந்துவிடும்.
Vinayagar Chaturthi 2023 : விநாயகருக்கு உகந்த தேங்காய் பூரண கொழுக்கட்டை ரெசிபி..!
பின் பாதி எடுத்து வைத்துள்ள பிசைந்த அரிசி மாவை தண்ணீர் ஊற்றி கரைத்துக்கொள்ளுங்கள். அதை அப்படியே கொதிக்கும் வெல்லப் பாகில் ஊற்றிக் கிளறுங்கள்.
பின் ஏலக்காய் பொடி சேர்த்துக்கொள்ளுங்கள். அதோடு நெய்யும் சேர்த்துக்கொள்ளுங்கள். சிறு தீயில் 7 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள். கெட்டி பதம் வரும் போது தேங்காய் பால் ஊற்றுங்கள்.
ஒரு கொதி வந்ததும் இறக்கிவிடுங்கள். அவ்வளவுதான் தேங்காய் பால் கொழுக்கட்டை தயார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.