நாய் கடித்ததை மறைத்த சிறுவன்… ரேபிஸால் உயிரிழந்த சோகம்; பெற்றோர்களே உஷார்! |Boy Dies of Rabies, Month After Hiding Dog Bite

Share

நாய் கடித்ததை ஒரு மாதமாகப் பெற்றோரிடம் சொல்லாமல் மறைத்த சிறுவன் ரேபிஸால் உயிரிழந்திருக்கிறார்.

உத்தரப்பிரதேச மாநிலம், காஸியாபாத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன், சரண் சிங் காலனியில் வசித்து வந்துள்ளார். 8-ம் வகுப்பு படிக்கும் இச்சிறுவனை, பக்கத்து வீட்டு நாய் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு கடித்திருக்கிறது.

இதுபற்றி சொன்னால் எங்கே தன்னுடைய பெற்றோர்கள் ஏதாவது சொல்வார்களோ என பயந்துபோய், நாய் கடிதத்தைச் சிறுவன் கூறாமல் இருந்துள்ளார்.

சில நாள்களில் ரேபிஸால் பாதிக்கப்பட்டு வழக்கத்திற்கு மாறாக நடக்கத் தொடங்கி இருக்கிறார். சாப்பிடுவதையும் முழுவதுமாக நிறுத்தி உள்ளார். செப்டம்பர் 1-ம் தேதியே தான் பக்கத்து வீட்டு நாயால் கடிக்கப்பட்டிருப்பதை குடும்பத்தினரிடம் கூறியிருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து புலந்த்ஷாஹரில் ஆயுர்வேத மருத்துவரால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அங்கிருந்து காஸியாபாத்திற்குச் சிறுவன் ஆம்புலன்சில் கொண்டுவரப்பட்டபோது செப்டம்பர் 4 திங்கட்கிழமை மாலை இறந்துள்ளார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com