Doctor Vikatan: உடையை நனைக்கும் அளவுக்கு அதீத வியர்வை… கட்டுப்படுத்த என்ன செய்வது? | Doctor Vikatan: What can be done to control excessive sweating

Share

அதீத வியர்வை பாதிப்புடன் யாரேனும் மருத்துவரைச் சந்திக்க வந்தால் முதலில் அவருக்கு சில அடிப்படை சோதனைகள் தேவைப்படும். தைராய்டு பாதிப்பில் இப்படி அதீத வியர்வை இருக்கலாம். எதற்கெடுத்தாலும் பதற்றப்படும் குணம் உள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகள், இதயநோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கெல்லாம் சில பரிசோதனைகளைச் செய்யச் சொல்வோம்.

ஹைப்பர் ஹைட்ரோசிஸ் என்கிற பாதிப்பு, பெரும்பாலும் எந்தப் பிரச்னையையும் தருவதில்லை. ஆனால் அதுவே காய்ச்சலுடன் வியர்வை, இரவில் மட்டும் வியர்வை போன்றவை இருந்தால், அது குறித்து ஆராய வேண்டியிருக்கும். உதாரணத்துக்கு டிபி, லிம்ஃப்போமா போன்ற பாதிப்புகள் குறித்து யோசிக்க வேண்டியிருக்கும்.

வியர்வை வாடை

வியர்வை வாடை

மெனோபாஸ் காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கிற பெண்களுக்கும் இப்படி திடீர் திடீரென வியர்ப்பதும், இரவில் வியர்ப்பதும், உடல் சூடாவதும் இருக்கும். மேற்குறிப்பிட்ட எந்தக் காரணமும் இல்லாமல் அதிகமாக வியர்க்கிறது என்றால் நிறைய தண்ணீர் குடிப்பது, தளர்வான காட்டன் உடைகளை அணிவது போன்றவற்றைப் பின்பற்ற வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com