இனிப்பு என்றால் யாருக்கு தான் பிடிக்காது. திருமணங்கள், விழாக்கள், விருந்து,திருவிழா, என்று எது வந்தாலும் முதலில் இனிப்பு தான் வழங்கப்படும். இனிப்பு என்றதும் கட்டு, ஜிலேபி, மைசூர் பாக், மில்க் ஸ்வீட் பற்றி எல்லாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் முட்டையை வைத்து அல்வா செய்யமுடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
முட்டையை வைத்து ஆம்லெட், புல் பாயில், ஹால்ப் பாயில், கலக்கி, முட்டைப் பொரியல், சாண்விட்ச் எல்லாம் செய்யலாம். முட்டையை வைத்து எப்படி இனிப்பு செய்வது? முட்டை வாசம் வீசுமே. இனிப்பு செய்தால் அதிலும் வாசம் வீசுமே என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. ஆனால் அந்த வாசம் எதுவும் வராமல் அட்டகாசமான சூப்பர் இனிப்பு வகை செய்யலாம் என்பதை நம்புவீர்களா? அதற்கான ரெசிபியை தான் இப்போது சொல்ல இருக்கிறோம்.
முட்டை ஹல்வா செய்யத் தேவையான பொருட்கள்
10 முட்டை
2 கப் சர்க்கரை
2 1/2 கப் நெய்
தேவைக்கேற்ப தண்ணீர்
2 லிட்டர் முழு கிரீம் பால்
2 கப் முந்திரி, உலர் திராட்சை
2 குங்குமப்பூ செதில்கள்
செய்முறை :
அற்புதமான சுவை மற்றும் தனித்துவமான இனிப்பு டிஷான முட்டு ஹல்வா செய்ய முதலில் முந்திரியை சுமார் அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். முந்திரி மென்மையாக மாறியதும் அதை மிருதுவான பேஸ்டாக அரைத்துக்கொள்ளவும். இல்லையெனில், முட்டையின் சுவை ஆதிக்கம் செலுத்திவிடும். இந்த ஹல்வாவும் முக்கிய பங்கு இது.
அதே நேரத்தில் குங்குமப்பூவை 1-2 டீஸ்பூன் வெதுவெதுப்பான பாலில் ஊறவைக்கவும், அதே நேரம் உலர்ந்த திராட்சையை சிறிது தண்ணீரில் போட்டு ஊறவைக்கவும். இது தான் முக்கியமான படி. அதன் பின்னர் அல்வாவின் மற்ற தயாரிப்புகளைத் தொடங்கலாம்.
அடுத்தது கோயாவை தயார் செய்வது. மிதமான தீயில் ஒரு ஆழமான அடி கனமான பாத்திரத்தை வைத்து அதில் பால் சேர்க்கவும். மிதமான தீயில் சிறிது நேரம் கொதிக்க விட்டு, பால் அடியில் ஒட்டாதவாறு இடையில் கிளறவும். பால் இருகி கோயா தயாரானதும், தீயை அணைத்து தனியாக ஆற வைக்கவும்.
இப்போது, ஒரு பெரிய கடாயை மிதமான தீயில் வைத்து, அதில் முந்திரி அரைத்த விழுது மற்றும் சர்க்கரையுடன் கோயாவை சேர்க்கவும். அனைத்து பொருட்களையும் நன்றாக கலக்கவும். இப்போது, ஒரு பெரிய கிண்ணத்தை எடுத்து அதில் முட்டைகளை உடைக்கவும். ஒரு விஸ்கரை பயன்படுத்தி முட்டைகளை நுரையடிக்க அடிக்கவும். கடாயில் இந்த முட்டை கலவையை சேர்த்து அனைத்து பொருட்களையும் நன்கு கலக்கவும்.

இப்போது, மற்றொரு ஆழமான அடிமட்ட பாத்திரத்தை மிதமான தீயில் வைத்து, அதில் நெய்யை உருக்கவும். நெய் போதுமான அளவு சூடானதும், அதில் முட்டை மற்றும் கோயா கலவையைச் சேர்த்து சுமார் 10 நிமிடங்கள் சமைக்கவும். அடியில் ஒட்டாதபடி தொடர்ந்து கிளறவும். 10 நிமிடங்களுக்குப் பிறகு, நமக்கு சுவையான முட்டை ஆல்வா கிடைத்துவிடும்.
இதையும் பாருங்க : விலை ஏறும் நேரத்தில் இஞ்சியை நீண்ட காலத்திற்கு வைத்து பயன்படுத்த 5 வழிகள்..!
அல்வா தயார் ஆனதும், அதோடு குங்குமப்பூ பாலுடன் ஏலக்காய் தூள் சேர்க்கவும். நன்கு கலந்து ஊறவைத்த திராட்சை மற்றும் நறுக்கிய முந்திரி கொண்டு அலங்கரிக்கவும். சூடாக பரிமாறினால் அல்வா உள்ளே இறங்கும் வேகமே தெரியாது. நிச்சயம் முயற்சி செய்து பாருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.