Doctor Vikatan: ஆணாயினும் பெண்ணாயினும் குறிப்பிட்ட வயதுக்குமேல் தொப்பை விழுந்துவிட்டால் போகப்போக அது அதிகரிக்கிறதே தவிர குறைவதே இல்லையே ஏன் ? உடல்நலத்தில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. உடலியக்கத்துக்கும் குறைவில்லை. சோறு, அரிசி, மாமிசம், ஓவர் தீனி, நொறுக்குத்தீனி என எல்லாவற்றையும் குறைத்தாலும் அல்லது அறவே நீக்கினாலும் கூட, பட்டினி கிடந்தாலும் கூட தொப்பை ஒரு இன்ச்கூட குறைய மறுக்கிறது. லைப்போசக்ஷன் அறுவை சிகிச்சை அல்லது வயிறு இரைப்பை அளவு குறைப்பு சர்ஜரி தான் ஒரே வழியா… என்னதான் செய்து தொப்பையைக் குறைக்க முடியும் ?
– முனியா- விடியாதொழியும் இச்சூரிய ஓலம், விகடன் இணையத்திலிருந்து…
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அறுவை சிகிச்சை மருத்துவர் பிரவீன் ராஜ்.
`கம்மியாதான் சாப்பிடறேன், வாக்கிங்கும் போறேன்.. ஆனா தொப்பை மட்டும் குறையவே மாட்டேங்குதே’ என கேட்கும் பலரைப் பார்க்கலாம். தொப்பையே வராமல் பார்த்துக் கொள்வதுதான் சுலபமான தீர்வு. வந்தபிறகு குறைப்பது மிகவும் சிரமமானது.
வெளிக் கொழுப்பு, உள் கொழுப்பு என, கொழுப்பில் இருவகை உண்டு. சிறுகுடலைச் சுற்றியும் கல்லீரலிலும் காணப்படுவது உள் கொழுப்பு. இந்தியர்களைப் பொறுத்தவரை பிறவியிலேயே இந்த வகை கொழுப்பு சற்று அதிகமாகவே இருக்கும். அடுத்து நம் உணவுப்பழக்கம்.