Doctor Vikatan: அடிக்கடி இம்சை தரும் கால் ஆணி… காரணமும் தீர்வுகளும் என்ன? | Doctor Vikatan: foot corns – What are the causes and solutions?

Share

Doctor Vikatan: என் வயது 31. எனக்கு அடிக்கடி கால்களில் ஆணி வருகிறது. அவ்வப்போது மருத்துவரிடம் காட்டி சிகிச்சை எடுக்கிறேன். இது வராமல் தவிர்ப்பதற்கு வழிகளே இல்லையா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்.

மருத்துவர் ஸ்பூர்த்தி அருண்

மருத்துவர் ஸ்பூர்த்தி அருண்

கால் ஆணி என்பது பலரையும் பாதிக்கிற ஒரு பிரச்னை. அனேகம் பேர் வாழ்நாளில் ஒன்றிரண்டு முறையாவது இந்தப் பிரச்னையை அனுபவித்திருப்பார்கள். அழுத்தம் அல்லது உராய்வின் காரணமாக பாதத்தின் ஒரு பகுதி மட்டும் அழுத்தமாக, கடினமாக மாறுவதால் ஏற்படும் பாதிப்பு இது. பயப்படக்கூடிய அளவுக்கு இது பெரிய பிரச்னை எல்லாம் இல்லை.

கால் ஆணியில் வலி இருந்தால் அது குறித்து கவனிக்க வேண்டும். பார்க்கப் பிடிக்கவில்லை என்ற நிலையிலும் அதை அகற்றுவதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ளலாம். மருத்துவரை அணுகி, இவற்றை வெட்டி அகற்ற வேண்டியிருக்கும். மற்றபடி இது வேறு எந்தப் பிரச்னையையும் ஏற்படுத்தாது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com