உக்ரைனில் ஆறு வயது சிறுமிக்கு 4 வயது சிறுவனின் இதயம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் மாற்றி வைக்கப்பட்ட சம்பவம் அனைவரின் கவனத்தையம் பெற்றுள்ளது.
உக்ரைனின் தலைநகர் கெய்வில் 6 வயது சிறுமிக்கு 4 வயது சிறுவனின் இதயம் மாற்றி வைக்கப்பட்டுள்ளது. மூளையில் உள்ள ரத்தக் குழாய்கள் விரிவடையும் அனியூரிசம் (aneurysm) பாதிப்பால் இறந்த சிறுவனின் இதயத்தை, மூன்று மணிநேர அறுவை சிகிச்சைக்குப் பின்னர் மருத்துவர்கள் சிறுமிக்கு மாற்றி வைத்தனர்.
இருவரும் குழந்தைகள் என்பதால், மருத்துவர்கள் கூடுதல் கவனத்தோடு அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளனர். சிறிய குழந்தைகளுக்கிடையில் செய்யப்பட்ட முதல் இதய மாற்று அறுவை சிகிச்சையாக இது கருதப்படுகிறது. தலைமை விஞ்ஞானி டாக்டர் போரிஸ் டோடுரோவ் தலைமையிலான மருத்துவர்கள் குழு இச்சிகிச்சையை மேற்கொண்டனர்.