மற்றபடி சமூகவலைத்தளங்களில் பகிரப்படுவது போல `இந்த ஜூஸை குடித்தால் ரத்தம் சுத்தமாகும், இந்த சிரப்பை குடித்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும்’ என்றெல்லாம் அலோபதி மருத்துவம் எதையும் பரிந்துரைப்பதில்லை.
எனவே இந்தத் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் பின்பற்றுவதைத் தவிர்ப்பதுதான் சிறந்தது. ஊட்டச்சத்துள்ள உணவின் மூலமே ரத்தத்துக்குத் தேவையான ஊட்டம் கிடைக்கும். ரத்த ஓட்டம் சீராக இருப்பவர்களுக்கு ரத்தத்தைச் சுத்திகரிக்கும் தேவையும் ஏற்படாது.
உங்களுடைய விஷயத்தில் ரத்தத்தைச் சுத்திகரிக்க வேண்டிய தேவை என்ன என்று தெரியவில்லை. உங்களுக்கு உடல்நலத்தில் ஏதேனும் பிரச்னை இருந்தால் நீங்களாக அதற்கான காரணத்தைக் கற்பனைசெய்துகொண்டு சுய மருத்துவம் மேற்கொள்ளாமல் மருத்துவ ஆலோசனையை நாடுவதுதான் பாதுகாப்பானது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.