Doctor Vikatan: எனக்கு ஐஎல்டி ( ILD) எனப்படும் நுரையீரல் பாதிப்பு இருக்கிறது. அதற்கான சிகிச்சைகள் எடுத்து வருகிறேன். ஒரு நுரையீரலுடன் வாழ்வது சாத்தியமா?
– Uma, விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் திருப்பதி.
நீங்கள் குறிப்பிடுவது ‘இன்டர்ஸ்டிஷியல் லங் டிசீஸ்’ என்ற பிரச்னை என தெரிகிறது. இந்தப் பிரச்னையானது பொதுவாக இரண்டு நுரையீரைல்களையும் தான் பாதிக்கும். மிக அரிதாகத்தான் அது ஒரு நுரையீரலை பாதிக்கும்.
இந்த நோய் பாதிக்க பல காரணங்கள் இருக்கலாம். உதாரணத்துக்கு, ஒவ்வாத பொருள்களுடன் பல வருடங்கள் தொடர்பில் இருப்பது, ஆட்டோஇம்யூன் குறைபாடுகள், செல்லப்பிராணிகள் வளர்ப்பது என இதற்கு காரணம் எதுவாகவும் இருக்கலாம். மூச்சு விடுவதில் சிரமம், இருமல், நெஞ்சை அழுத்துவது போன்ற உணர்வு, களைப்பு என இதன் அறிகுறிகளும் பல.