அது மட்டுமல்ல ஊறவைத்து, தோலுரித்துச் சாப்பிடும்போது பாதாம் எளிதில் செரித்துவிடும். மென்று சாப்பிடுவதும் எளிதாகும். ஊறவைத்த பாதாமில் புரதச்சத்து அதிகம். மக்னீசியம் சத்து குறையாமல் கிடைக்கும். சைவ உணவுக்காரர்களுக்கு உணவின் மூலம் புரதச்சத்தைப் பெறுவதில் சிக்கல் இருக்கும். அவர்களுக்கு பாதாம் மிகச் சிறந்த புரதமாக அமையும்.
பாதாம் மட்டுமல்ல, பொதுவாகவே நட்ஸை இப்படி ஊறவைத்து, தோலுரித்துச் சாப்பிடும்போது சத்துகள் கிரகிக்கப்படுவது அதிகரிக்கும். குழந்தைகள், பெரியவர்கள் என எல்லோருக்கும் அப்படிச் சாப்பிடுவது இலகுவாகவும் இருக்கும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.