Doctor Vikatan: நள்ளிரவில் சிறுநீர் கழிக்கும் உந்துதல்; தூக்கம் தொடர்வதில் பிரச்னை… தீர்வு உண்டா? | Doctor Vikatan: Urinating in mid night, sleepless problem… is there a solution?

Share

Doctor Vikatan: என் வயது 64. சிறுநீர் கழிக்க நடு இரவில் எழுந்தால், பின் உறக்கம் வருவதேயில்லை. நீரிழிவு பிரச்னை இருக்கிறது. இரவு எட்டு மணிக்கு மேல் நீர் அருந்துவது இல்லை. இருப்பினும் தூக்கத்தினிடையில் எழவேண்டிய நிலை தொடர்கிறது. இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு?

– Anubavi Raj, விகடன் இணையத்திலிருந்து.

பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபி

மருத்துவர் சஃபி

மருத்துவர் சஃபி

இரவு எட்டு மணிக்கு மேல் தண்ணீர் குடிப்பதில்லை என்கிறீர்கள். ஆனாலும் நள்ளிரவில் தூக்கம் கெட்டு விழித்தெழ உங்களுடைய ரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லாததுதான் காரணமாக இருக்கும்.

கடைசியாக நீங்கள் எப்போது சர்க்கரைநோய்க்கான பரிசோதனை செய்தீர்கள் என்று பாருங்கள். தற்போது ரத்தச் சர்க்கரை அளவு எவ்வளவு இருக்கிறது, மூன்று மாதங்களின் சராசரியான ஹெச்பிஏ1சி சோதனையில் ரத்தச் சர்க்கரை அளவு எவ்வளவு இருக்கிறது என்றும் பார்க்கப்பட வேண்டும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com