நேபாளத்திற்கு எதிரான ஆட்டத்தில் 339 ரன்கள் குவித்த வெஸ்ட் இண்டீஸ்…

Share

உலகக்கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் நேபாளத்திற்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 339 ரன்கள் குவித்துள்ளது. உலகக்கோப்பையில் நேரடியாக விளையாட 8 அணிகள் தகுதி பெற்றுள்ள நிலையில் மீதம் உள்ள 2 அணிகளை தேர்வு செய்யும் தகுதிச் சுற்று போட்டி ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய ஆட்டத்தில் நேபாளம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நேபாளம் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் தொடக்க வீரர்களாக பிராண்டன் கிங் மற்றும் கைல் மேயர்ஸ் ஆகியோர் களத்தில் இறங்கினர். மேயர்ஸ் 1 ரன்னிலும் அடுத்து வந்த சார்லஸ் ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினர். பிரான்டன் கிங் 32 ரன்னில் ஆட்டமிழந்தார்.

4 ஆவது விக்கெட்டிற்கு இணைந்த கேப்டன் ஷாய் ஹோப் மற்றும் நிகோலஸ் பூரன் இணை அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது. ஹோப் 129 பந்துகளில் 3 சிக்சர் 10 பவுண்டரியுடன் 132 ரன்களும், பூரன் 94 பந்தில் 4 சிக்சர் 10 பவுண்டரியுடன் 115 ரன்களும் குவித்தனர். இந்த இணை 4 ஆவது விக்கெட்டிற்கு 216 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. அடுத்து வந்த ரோமன் பவெல் 29 ரன்னும், ஹோல்டர் 16 ரன்களும் எடுக்க 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 339 ரன்கள் எடுத்தது.

இதையும் படிங்க – கால்பந்தாட்ட போட்டியில் பாகிஸ்தானை வென்றது இந்திய அணி… 4-0 என்ற கணக்கில் அபார வெற்றி

இதையடுத்து 340 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நேபாளம் அணி வீரர்கள் விளையாடி வருகின்றனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com