வீட்டில் இருப்பவர்களுக்கு தானியங்களை கொண்டு ஆரோக்கியமான ரெசிபி செய்து கொடுக்க நம்மில் பலர் நினைப்போம். ஆனால், என்ன ரெசிபி செய்வது என ஒரு குழப்பம் இருக்கும் அல்லது வீட்டில் இருப்பவர்கள் இதை விரும்பி உன்ன மாட்டார்கள் என்ற எண்ணம் இருக்கும்.
மாலை நேரத்தில், தேநீருடன் ஒரு ஆரோக்கியமான ரெசிபியை செய்து கொடுக்க நீங்கள் விரும்பினால், குயினோவா அதாவது சீமை தினையுடன் வெங்காயம், குடைமிளகாய், கேரட், முட்டைக்கோஸ் சேர்த்து செய்யக்கூடிய ஒரு அருமையான குயினோவா கட்லெட் ரெசிபி பற்றி கூறுகிறோம். இது ஆரோக்கியம் மற்றும் சுவை மிகுந்தது. குயினோவா புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்தது, இது எடை இழப்புக்கும் சரியான தானியம் இது. இதோ உங்களுக்கான ரெசிபி…
தேவையான பொருட்கள் :
குயினோவா – 1 கப்.
வெங்காயம் – 1.
குடைமிளகாய் – 1.
கேரட் – 1.
முட்டைக்கோஸ் – 100 கிராம்.
கடலை மாவு – 3 ஸ்பூன்.
மிளகாய் பொடி – 1 ஸ்பூன்.
மல்லி பொடி – 1 ஸ்பூன்.
கொத்தமல்லி – 1 கொத்து.
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை :
முதலில், கட்லெட் செய்ய எடுத்துக்கொண்ட குயினோவாவை 30 நிமிடங்களுக்கு தண்ணீரில் ஊர வைத்து – வடிகட்டி பின் மிக்ஸியில் இட்டு நன்கு பேஸட் போல் அரைத்து தனியே எடுத்து வைக்கவும்.
இதையடுத்து, எடுத்துக்கொண்ட வெங்காயம், குடைமிளகாய், கேரட், முட்டைக்கோஸ் ஆகியவற்றை நன்கு பொடியாக நறுக்கி, அதை அகன்ற பாத்திரம் ஒன்றில் சேர்த்துக்கொள்ளவும்.
பின் இதனுடன் அரைத்து வைத்த குயினோவா விழுது, உப்பு, மிளகாய் பொடி, மல்லிப்பொடி, கொத்தமல்லி, கடலை மாவு ஆகியற்றையும் சேத்து நன்கு பதமான பிசைந்துக்கொள்ள கட்லெட் மாவு தயார்.
Also Read | இட்லி, தோசை, சப்பாத்திக்கு ஏற்ற தக்காளி குருமா செய்யலாமா..?
தற்போது கட்லெட் பொரித்து எடுக்க கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து, அதில் போதுமான அளவு எண்ணெய் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
இதனிடையே தயாராக உள்ள கட்லெட் மாவினை சிறு – சிறு அளவில் உருண்டையாக பிடித்து தனியே தயாராக எடுத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் நன்கு சூடானதும், உருட்டி வைத்த மாவு உருண்டைகளை தட்டையாக தட்டி எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுக்க சுவையான குயினோவா கட்லெட் தயார்.
பதமாக பொரித்து எடுத்த இந்த கட்லெட் துண்டுகளை ஒரு தட்டில் வைத்து, உங்களுக்கு பிடித்தமான சட்னி, சாஸுடன் சேர்த்து சுட சுட பரிமாறலாம். இதன் சுவை அட்டகாசமாக இருக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.