தக்காளி இல்லாமல் எந்த சமையலும் முழுமையப்பிடையாது. ஏனென்றால், தக்காளி அவ்வளவு முக்கியமானது, சுவையை அதிகரிக்கக்கூடியது. நாம், இயல்பாக தக்காளி சாதம், தக்காளி குழம்பு, தக்காளி ரசம், தக்காளி சட்னி, தக்காளி ஊறுகாய் செய்திருப்போம். எப்போதாவது, தக்காளியை வைத்து குருமா செய்ய முயற்சித்ததுண்டா..?
இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பிரியாணி, வெள்ளை சாதம் என அனைத்திற்கும் ஏற்ற தக்காளி குருமா செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மசாலா விழுது அரைக்க…
தேங்காய் – 1/2 கப் துருவியது.
பச்சை மிளகாய் – 2.
சோம்பு – 1 தேக்கரண்டி
பொட்டுக்கடலை – 2 ஸ்பூன்.
பட்டை – 1 சிறிய துண்டு.
கிராம்பு – 2.
ஏலக்காய் – 2.
தக்காளி குருமா செய்ய…
எண்ணெய் – 3 ஸ்பூன்.
சீரகம் – 1/2 ஸ்பூன்.
பிரியாணி இலை – 1.
பட்டை, கல்பாசி, ஜாவித்ரி – சிறிது.
வெங்காயம் – 1 நறுக்கியது.
பூண்டு இடித்தது – சிறிது.
கறிவேப்பிலை – தேவையான அளவு.
தக்காளி – 6 நறுக்கியது.
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்.
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்.
மல்லி தூள் – 2 1/2 ஸ்பூன்.
உப்பு – தேவையான அளவு.
கொத்தமல்லி இலை – சிறிது நறுக்கியது.

செய்முறை :
> முதலில், மசாலா விழுது அரைக்க ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், சோம்பு, பொட்டுக்கடலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு விழுதாக அரைத்து கொள்ளவும்.
> இப்போது, ஒரு அகலமான கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். எண்ணெய் சூடானதும், சீரகம், பிரியாணி இலை, பட்டை, கல்பாசி, ஜாவித்ரி சேர்த்து வதக்கவும்.
> அடுத்து இடித்த பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
> பிறகு நறுக்கிய தக்காளியை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
Also Read | சிக்கனில் இப்படி சூப் செஞ்சிருக்கீங்களா..? குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க..!
> பின்பு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
> தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு 10 நிமிடம் கொதிக்கவிடவும்.
> அடுத்து அரைத்த மசாலா விழுதை சேர்த்து தண்ணீர், உப்பு தேவைப்பட்டால் சேர்த்து கலந்து விட்டு 10 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்கவிடவும்.
> இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலையை சேர்த்து நன்கு கலந்து விட அட்டகாசமான தக்காளி குருமா தயார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.