சமூக வலைத்தளங்களில் பாட்டுப் பாடுவது, நடனம் ஆடுவது, ஐஸ் பக்கெட் என ஏதாவது ஒரு சேலஞ்ச் டிரெண்டாகி கொண்டே இருக்கும். அந்த வகையில் தற்போது டிரெண்டாகி வருவது தான், க்ரோமிங் சேலஞ்ச் (chroming challenge).
இந்தச் சவாலை ஏற்கும் ஒருவர், வாசனைத் திரவியங்களை மோந்து பார்க்க வேண்டும். கேட்பதற்கு இந்த சேலஞ்ச் வேடிக்கையாக இருந்தாலும், இதில் பல ஆபத்துகள் மறைந்திருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த சேலஞ்சை மேற்கொண்ட 13 வயது ஆஸ்திரேலிய சிறுமி எஸ்ரா ஹெய்ன்ஸ் உயிரிழந்துள்ளார். இவர் வாசனைத் திரவியத்தை மோந்து பார்த்தபோது மாரடைப்பும், மீட்க முடியாத மூளை பாதிப்பும் ஏற்பட்டு இருக்கிறது. மருத்துவமனையில் ஒரு வாரமாக அனுமதிக்கப்பட்டிருந்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.