`ஒலிம்பிக் பதக்கத்தை ஓஹையோ நதியில் வீசிய முகமது அலி' – வீராங்கனைகள் நினைவுபடுத்திய வரலாறு

Share

இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவரும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ்பூஷண் சரண்சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டில் உரியச் சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை  புதிதாகத் திறக்கப்பட்ட நாடாளுமன்ற திறப்பு விழாவின்போது பேரணியாக சென்ற மல்யுத்த வீரர்களை போலீசார் கைது செய்தனர். இது பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து வீராங்கனைகள் அனைவரும் மல்யுத்தத்தில் வென்ற பதக்கங்களை கங்கை ஆற்றில் வீசப் போவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில்  வீராங்கனைகளின் இந்த செயல் குத்துச்சண்டை வீரர் முகமது அலியை நினைவுபடுத்தும் விதமாக உள்ளது என்று பலரும் சமூக வலைதளங்களில்  தெரிவித்து வருகின்றனர். 

போராட்டத்தில் மல்யுத்த வீராங்கனைகள்

1960-ல் இருந்து 1981 வரை குத்துச்சண்டை உலகின் முடிசூடா மன்னனாக இருந்தவர் முகமது அலி. 1960-ம் ஆண்டு தனது 18-வது வயதில் ரோமில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதனை படைத்தவர். 61 தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளில் 56 முறை வெற்றி பெற்று அனைவரையும்  ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.      

ஒருமுறை முகமது அலி அமெரிக்க நாட்டில் தனது சொந்த ஊரான லூயிவில் பகுதியில் உள்ள ஒரு உணவகத்துக்கு உணவருந்த சென்றுபோது கறுப்பினத்தவர் என்ற காரணத்தைச் சொல்லி உணவகத்தில் அவருக்கு உணவு வழங்க மறுத்துள்ளனர்.

முகமது அலி

இதனால் இனவெறிக்கு எதிராக தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் தான் வென்ற ஒலிம்பிக் பதக்கத்தை ஒஹையோ ஆற்றில் வீசியிருக்கிறார் முகமது அலி. இருப்பினும் 1996-அட்லாண்டாவில் நடைபெற்ற ஒலிம்பிக்கின் போது அவருக்கு மீண்டும் பதக்கத்தை வழங்கி கவுரவித்திருக்கிறது ஒலிம்பிக் கமிட்டி.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com