சாவர்க்கர் வரலாறு: இந்தியாவில் சிலருக்கு அவர் ஹீரோ, சிலருக்கு வில்லனாக இருப்பது ஏன்?

Share

  • ரெஹான் ஃபசல்
  • பிபிசி செய்தியாளர்

சாவர்க்கர்

பட மூலாதாரம், SAVARKARSMARAK.COM

படக்குறிப்பு,

சாவர்க்கர்

1906, அக்டோபர் மாதம், லண்டனில் ஒரு குளிர் மாலை. சித்பாவன பிராமணரான விநாயக் தாமோதர் சாவர்க்கர், இந்தியா ஹவுஸில் உள்ள தனது அறையில் இறால்களை வறுத்துக் கொண்டிருந்தார். தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை, உலகின் கவனத்துக்குக் கொண்டு வருவதற்காக லண்டன் வந்திருந்த அந்த குஜராத்தி வைஷ்யரை அன்று இரவு உணவிற்கு அழைத்திருந்தார் சாவர்க்கர். அந்த விருந்தினரின் பெயர், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி.

ஆங்கிலேயர்களுக்கு எதிரான தனது உத்தி, ஆக்ரோஷமானது என்று சாவர்க்கரிடம் காந்தி கூறிக் கொண்டிருந்தார். ஆனால், சாவர்க்கர் அவரை இடைமறித்து, “முதலில் சாப்பிடுவோம்” என்றார்.

“அப்போது காந்தி மகாத்மா அல்ல. வெறும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி மட்டுமே. அதுவரை இந்தியா காந்தியுடைய கர்ம பூமியாக ஆகவில்லை,” என்று ‘The RSS-Icons of the Indian Right’ என்ற புத்தகத்தை எழுதிய நீலாஞ்சன் முகோபாத்யாய் கூறுகிறார்.

சரி கதைக்கு வருவோம். “சாவர்க்கர் காந்திக்கு இரவு விருந்து அளித்தபோது, ​​தான் இறைச்சியோ மீனோ சாப்பிடுவதில்லை என்று காந்தி மன்னிப்பு கேட்டார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com