ஜி.ரவிச்சந்திரன், திண்டிவனம்
‘என் மகனுக்கு 10 வயது. சில சமயம் இரவில் தூங்கும்போது, படுக்கையிலேயே சிறுநீர் கழித்துவிடுகிறான். இதை எப்படி நிறுத்துவது?”
டாக்டர் அருண்பாபு, குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி, புதுச்சேரி
‘ஐந்து வயது வரை ஒரு குழந்தை, படுக்கையில் சிறுநீர் கழித்தால் பயப்படத் தேவை இல்லை. ஐந்து வயதுக்குப் பிறகும் படுக்கையில் சிறுநீர் கழித்தால், என்ன காரணம் என்பதைக் கண்டறிய வேண்டும். ஒரு முறைகூட அவன், இரவில் படுக்கையை ஈரப்படுத்தாமல் இருந்தது இல்லையென்றால் அதை ‘தானாக சிறுநீர்கழித்தலின் முதல் நிலை’ (Primary Nacturnal Enuresis) என்போம். அதுவே, தொடர்ந்து ஆறு மாதம் குழந்தையின் படுக்கை ஈரம் இல்லாமல் இருந்து, தற்போது மீண்டும் இரவில் படுக்கையிலே சிறுநீர் கழித்தால் அதை ‘இரண்டாம் நிலை’ (Secondary Nocturnal Enuresis) என்போம். இரண்டாம் நிலைப் பிரச்னையானது மன அழுத்தம், உளவியல் பிரச்னை, சிறுநீர்ப் பாதையில் நோய்த்தொற்று, டைப் 1 சர்க்கரை நோய், டயாபடீஸ் இன்ஸிபிடஸ் (Diabetes insipidus) போன்றவற்றால் ஏற்படலாம்.