இன்றைக்கு மாறி வரும் உணவு பழக்கவழக்கங்கள், உடல் உழைப்பு எதுவும் இல்லாமல் உட்கார்ந்த நிலையிலேயே அதிக நேரம் வேலைப்பார்ப்பது போன்ற பல்வேறு காரணங்களால் நமது உடல் எடை என்பது அதிகரிக்கிறது. வழக்கத்திற்கு மாறாக நமது உடல் எடையைக் கூடும் போது பல உடல் நல பிரச்சனைகள் ஏற்படுவது ஒருபுறம் இருந்தாலும், மன உளைச்சலும் ஏற்படுகிறது. எனவே தான் எப்படியாவது அதிகரித்த எடையைக் குறைத்துவிட வேண்டும் என்று டயட்டில் இருப்பது, வாக்கிங், ஜாக்கிங் போன்ற விஷயங்களை மேற்கொள்வது போன்ற பல முறைகளை மேற்கொள்கின்றனர். இதோ இந்த வரிசையில் உடல் எடைக்குறைப்பிற்கு பீட்ரூட் ரசமும் இடம் பெற்றுள்ளது.
உடல் எடைக்குறைப்பில் பீட்ரூட் ரசம்..
மற்ற காய்கறிகளை விட பீட்ரூட்டில் குறைந்த அளவு தான் கலோரிகள் உள்ளது. குறிப்பாக 100 ml பீட்ரூட் சாற்றில் வெறும் 35 கலோரிகள் தான் உள்ளது. எனவே தான் நாம் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடையைக் கூடாமல் பார்த்துக் கொள்ள முடியும். இதோடு பீட்ரூட்டிர் புரதசத்து, நீர்ச்சத்து, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், ஃபோலேட் நார்ச்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம், இரும்புச்சத்துகள் உள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கும் பீட்ரூட் பயனுள்ளதாக உள்ள நிலையில் இன்றைக்கு பீட்ரூட் ரசம் எப்படி செய்யலாம்? என்பது குறித்து இங்கே அறிந்துக்கொள்வோம்.
தேவையானப் பொருட்கள்
- பீட்ரூட் – 1 கிண்ணம்
- தேங்காய் – 2 டீஸ்பூன்
- எண்ணெய்- 2 தேக்கரண்டி
- கடுகு- 1 தேக்கரண்டி
- சீரகம் – ½ டீஸ்பூன்
- உளுந்தம் பருப்பு – ½ தேக்கரண்டி
- பூண்டு- 2
- கறிவேப்பிலை
- வெங்காயம் – 2
- பச்சை மிளகாய் – 2
- புளி கரைசல்
- 1 வசந்த கறிவேப்பிலை
- 1/2 வெங்காயம்
- 2 பச்சை மிளகாய்
- 1 கப் புளி கூழ்
- மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
- தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:
முதலில் பீட்ரூட், தேங்காய் மற்றும் உளுந்தம் பருப்பை மென்மையாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை, சீரகம், வெங்காயம் சேர்த்து தாளித்து புளிக்கரைசலை சேர்க்கவும். ஒரு 5 நிமிடங்கள் அடுப்பில் வைத்தப்பிறகு இதனும் அரைத்து வைத்துள்ள பீட்ரூட் கரைசல் மற்றும் உப்பு சேர்த்து சில கொதி நிலை வந்ததும் இறக்கி வைக்கவும்.
இப்போது பீட்ரூட் ரசம் ரெடி. இதை நீங்கள் சாதத்திற்கு மற்றும் சூப் போன்று பருகலாம். நிச்சயம் உங்களுக்கு நல்ல சுவையை அளிப்பதோடு உடல் எடைக்குறைப்பிற்கும் உதவியாக உள்ளது.
எனவே டயட் ப்ளானில் இருப்பவர்கள், தினமும் கூட ஒரு முறையாவது இந்த பீட்ரூட் ரசத்தை உங்களது உணவுமுறையில் சேர்த்துக்கொள்ள மறந்துவிடாதீர்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.