203 யூனிட் ரத்த தானம்… கின்னஸ் சாதனை படைத்த 80 வயது மூதாட்டி!|80-Year-Old Woman has Donated 203 Units Of Blood

Share

80 வயதான பெண் ஒருவர், 203 யூனிட் ரத்த தானம் அளித்து, முழு ரத்ததானம் அளித்த பெண் என்ற கின்னஸ் சாதனையை படைத்திருக்கிறார்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஜோசபின் மிச்சாலுக் என்ற பெண்மணி, 1965ம் ஆண்டில், தன்னுடைய 22வது வயதில் ரத்த தானம் அளிக்கத் தொடங்கியுள்ளார். 60 ஆண்டுகளாக ரத்தம் கொடுத்து வரும் இவர், இதுவரை சுமார் 203 யூனிட் ரத்தம் அளித்துள்ளார்.

இவரின் இந்தப் பங்களிப்பு, எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றி உள்ளது. இதுவரை 96,019 மில்லி லிட்டர் (96 லிட்டர்) ரத்தம் கொடுத்துள்ளார்.

அமெரிக்காவில் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பவர்களுக்கு ரத்த தானம் செய்வதற்கு வயது வரம்பு இல்லாததால், 80 வயதிலும் இவரால் தொடர்ந்து ரத்த தானம் கொடுக்க முடிகிறது. ஒவ்வொரு வருடமும் 4 முறையாவது ரத்த தானம் செய்து விடுகிறார். 

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com