பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற 1,780 கோடி மதிப்பிலான திட்டங்களின் தொடக்க விழாவில் பேசிய யோகி ஆதித்யநாத், “நாட்டை பிளவுபடுத்தும் அரசியலைச் செய்யும் காங்கிரஸ், தன்னுடைய அரசியல் ஆதாயங்களுக்காக நக்சலிசம், தீவிரவாதம் ஆகியவற்றை ஊக்குவிக்கிறது.
அதோடு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பட்டியலினத்தவர்கள், ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர்கள் ஆகியோருக்கு எதிராகப் பேசி, நாடாளுமன்ற அமர்வைக் காற்றில் பறக்கவிட்டு, நீதிமன்ற அவமதிப்பு நிலைக்குத் தள்ளப்பட்டதற்கு இந்த தேசமே சாட்சியாக இருக்கிறது. எனவே, பட்டியலினத்தவர்கள், ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர்களை அவமதித்ததற்காக ஒட்டுமொத்த நாட்டிடமும் காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.