கைகளில் கிடைக்கிற காய்கறிகள், பழங்களை எல்லாம் வெட்டிப்போடுவது, கொஞ்சம் உப்பும், எலுமிச்சைப்பழச்சாறும் சேர்த்துக் கலந்து சாப்பிடுவது… சாலட் என்றால் இப்படித்தான் செய்வார்கள் பலரும்.
ஒரு மாறுதலுக்கு வித்தியாசமான பொருள்களில் வேற லெவல் டேஸ்ட்டில் விதம்விதமான சாலட் செய்து சாப்பிட்டுப் பாருங்களேன்… `வேறெதுவும் தேவையில்லை, நீ மட்டும் போதும்’ என்று சாலடை கொண்டாடுவீர்கள்…
தேவையானவை:
ஊறவைத்த அவல் – 50 கிராம்
முளைகட்டிய பயறு – 2 டீஸ்பூன்
தோல் சீவி நறுக்கிய முள்ளங்கி,
வெள்ளரிக்காய், கேரட் கலவை – ஒரு கப்
பனீர் துண்டுகள் – 50 கிராம்
கரம் மசாலாத்தூள், ஆம்சூர் பவுடர் (மாங்காய்த்தூள்) – தலா கால் டீஸ்பூன்
கறுப்பு உப்பு – ஒரு சிட்டிகை
வெங்காயம், தக்காளி – தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)
நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு
மிளகுத்தூள், உப்பு – சிறிதளவு.

செய்முறை:
கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை ஒன்றாகக் கலந்து பரிமாறவும்.
தேவையானவை:
வெங்காயம் – ஒன்று (தோலுரித்துப் பொடியாக நறுக்கவும்)
கேரட், வெள்ளரிக்காய் – தலா ஒன்று (தோல் சீவி, பொடியாக நறுக்கவும்)
தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
வேகவைத்த ஸ்வீட் கார்ன் முத்துகள் – கால் கப்
கொத்தமல்லித்தழை, மிளகுத்தூள்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
கொடுக்கப்பட்டுள்ள பொருள்கள் அனைத்தையும் அகலமான பாத்திரத்தில் ஒன்றாகச் சேர்த்துக் கலந்து இரும்புச் சத்துமிக்க இந்த சாலட்டைப் பரிமாறவும்.
தேவையானவை:
ஆவியில் வேகவைத்த பூசணி, கேரட், பறங்கிக்காய், வெள்ளரிக் கலவை – ஒரு கப்
சீரகத்தூள், மிளகுத்தூள் – தலா கால் டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லித்தழை – சிறிதளவு
எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்
இந்துப்பு – சிறிதளவு

செய்முறை:
வேகவைத்த காய்கறிகளுடன் சீரகத்தூள், மிளகுத்தூள், இந்துப்பு, புதினா, கொத்தமல்லித்தழை, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்.
தினமும் இதை ஒரு கப் அளவு காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம். எடையைக் குறைக்க மிகவும் உதவும்.
தேவையானவை:
வாழைப்பூ, கொடுக்காய்ப்புளி காய் (இப்போது மார்க்கெட்டில் கிடைக்கிறது)
நெல்லிக்காய் – (பெரியது)
மாதுளம்பழ முத்துகள், மிளகுப்பொடி, உப்பு, பனங்கற்கண்டு, தேங்காய்த்துருவல் – தேவைக்கேற்ப

செய்முறை:
வாழைப்பூவின் உட்பகுதி இளசாக இருக்கும். நரம்பு இருக்காது. அதை எடுத்துப் பொடியாக நறுக்கவும். கொடுக்காய்ப்புளி காய்களை நறுக்கவும். நெல்லிக்காயைக் கொட்டை நீக்கி, துருவிக்கொள்ளவும். இதேபோல தேங்காயைத் துருவிக் கொள்ளவும். இவை எல்லாவற்றையும் கலந்து மிளகுப்பொடி, உப்பு சேர்த்து மாதுளைம்பழ முத்துகளைக் கலந்து, சிறிது பனங்கற்கண்டு சேர்க்கவும்.
இந்த சாலட்டில் ஆறு சுவைகளுடன் பெண்களுக்குத் தேவையான அனைத்துச் சத்துகளும் உள்ளன. எடைக் கட்டுப்பாட்டுக்கு உதவக்கூடிய இது, ரத்தத்தை விருத்தி செய்யும் லேடீஸ் ஸ்பெஷல் சாலட்.
தேவையானவை:
ஆவாரம் பூ – அரை கப்
வாகைப்பூ – கால் கப்
சுத்தம் செய்து நறுக்கிய
முழு நெல்லி – கால் கப்
மாதுளை முத்துகள் – அரை கப்
கழுவி நறுக்கிய ஆப்பிள் – அரை கப்
கழுவி நறுக்கிய கொய்யா – கால் கப்
கறுப்பு திராட்சை – கால் கப்
தேன் – 3 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
அனைத்துப் பழங்களையும் ஒரு கிண்ணத்தில் போட்டு, அதனுடன் ஆவாரம்பூ, வாகைப்பூ இரண்டையும் சேர்த்து, தேன் ஊற்றி நன்றாகக் கலந்து சாப்பிடவும். இது சத்து நிறைந்த சூப்பர் சாலட்.