அதிக இதயத்துடிப்பால் அவதிப்பட்ட நோயாளி; சென்னை காவேரி மருத்துவமனையில் வெற்றிகரமாக சிகிச்சை! | Kauvery Hospital successfully treated a patient suffering from heart diseases

Share

சென்னையில், இதயக்கீழறையில் அதிக இதயத்துடிப்பு (வென்ட்ரிகுலர் டாக்ரிக்கார்டியா) பிரச்னை இருந்த 42 வயது நோயாளிக்கு, இதய மின் உடலியங்கியல் இடையீட்டு செயல்முறை சிகிச்சையை, சென்னை காவேரி மருத்துவமனை வெற்றிகரமாக மேற்கொண்டு, அவரை காப்பாற்றி இருக்கிறது.

இதயத்தின் கீழறையில் அதிக இதயத்துடிப்பு (வென்ட்ரிகுலர் டாக்ரிக்கார்டியா) என்பது, இதயத் துடிப்பின்மை எனவும் அறியப்படுகிறது. இதயத்தின் கீழறைகளின் மின்சார சார்ட் சர்கியூட்களில் தோன்றும் இது, அதிவேகமாகக் கடத்தப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவருக்கு படபடப்பு, தலைச்சுற்றல், வலிப்பு போன்ற தாக்கங்கள் வழக்கமாக ஏற்படுகின்றன. சில நேரங்களில் மாரடைப்புகூட ஏற்படக்கூடும்.

காவேரி மருத்துவமனை

காவேரி மருத்துவமனை

இந்நிலையில், தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் 42 வயதான நோயாளி ஒருவர், உயிருக்கு மிகவும் ஆபத்தான தீவிர இதயத்துடிப்பு பிரச்னையுடன் சென்னை காவேரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு அழைத்து வரப்பட்டிருந்தார். இதயக்கீழறையில் அதிக இதயத்துடிப்பு (வென்ட்ரிகுலர் டாக்ரிக்கார்டியா – VT) பிரச்னை இருப்பது, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஈசிஜி பரிசோதனையில் தெரிய வந்தது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com