அரசு செயற்கை கருத்தரித்தல் மையங்கள் வேண்டும் என கோரிக்கை-நிறைவேற்றுமா அரசு. | a petition arise for requesting government fertility center

Share

தனியார் மருத்துவமனைகளில் இதயம், மூளை உள்ளிட்ட உடலுறுப்பு சிகிச்சைகளில் ஏற்படும் தவறுகள் குறித்த வழக்குகளை நீதிமன்றத்தில் விசாரிக்கும்போது, அது குறித்து விளக்கம் கேட்க அரசு தரப்பு மருத்துவரிடம் என்ன தவறு நேர்ந்திருக்கும் என்பதை நீதிமன்றம் கேட்டு அறியும். ஆனால், அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரித்தல் சிறப்பு மருத்துவர்கள் என யாரும் இல்லை. அப்படியிருக்கையில் தனியார் கருத்தரிப்பு மருத்துவமனை சிகிச்சையில் தவறு நேர்ந்தால் காரணங்களை அரசு மருத்துவர்களிடம் கேட்க வாய்ப்பே இல்லாமல் போய்விடுமே…

சமூக ஆர்வலர் அய்யா

சமூக ஆர்வலர் அய்யா

எனவே மாவட்டம்தோறும் செயற்கை கருத்தரிப்பு மையங்களை அரசு தொடங்க வேண்டும், தனியார் கருத்தரிப்பு மையங்களுக்கு கட்டண வரையறை நிர்ணயிக்க வேண்டும். இதனால் ஏழை எளிய பெண்களுக்கு குழந்தையின்மையால் ஏற்படும் மன உளைச்சலும் சமூக தாக்குதலும் குறையும்.

உயர்நீதிமன்றத்தில் மனு அளித்த பிறகு எந்தவித நேர்மறையான பதிலும், முன்னெடுப்பும் அரசு தரப்பிலிருந்து வரவில்லை. திருச்சியில் மட்டும் தொடங்குவோம் என்ற அறிவிப்பை மட்டும் அரசு வெளியிட்டுள்ளது. ஆனால், அதற்கு எந்த நிதியும் இதுவரை ஒதுக்கப்படவில்ல” என்றார் அய்யா.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com