பல்லு படாம பாத்துக்க: இது அடல்ட் காமெடியா, அசட்டு காமெடியா?

Share

பல்லு படாம பாத்துக்க

தமிழில் வயதுவந்தோரைக் குறிவைத்து எடுக்கப்படும் ‘அடல்ட் காமெடி’ வகைத் திரைப்படங்கள், எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன. ஆனால், படத்தைப் பார்க்கும்போது ஏமாற்றத்தையே தருகின்றன. ஏன் இப்படி?

‘டெம்பிள் மங்கீஸ்’ யூ டியூப் சேனல் மூலம் புகழ்பெற்ற விஜய் வரதராஜ் இயக்கிய ‘பல்லுப் படாம பாத்துக்க’ என்ற அடல்ட் காமெடி திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. தலைப்பிலேயே இது வயதுவந்தோருக்கான பாலியல் சார்ந்த நகைச்சுவைத் திரைப்படம் என்பதைச் சுட்டுவதைப் போல இருக்கிறது. இந்தத் தலைப்பின் மூலம், இளைஞர்களை ஈர்க்க முடிவு செய்திருக்கிறார் இயக்குநர்.

தற்கொலை செய்துகொள்ள முடிவுசெய்து ‘குஞ்சுத்தண்ணி காடு’ என்ற கேரள வனப் பகுதிக்கு ஆறு பேர் செல்கிறார்கள். ஆறு பேருக்கும் வெவ்வேறு விதமான பின்னணிக் கதை இருக்கிறது. ஆனால், அந்தக் காட்டிற்குப் போன பிறகுதான் நிறைய ‘ஜோம்பி’கள் அங்கு இருப்பது தெரிகிறது. அவற்றை ஒழித்துக்கட்ட கதாநாயகி முயன்றுகொண்டிருக்கிறார். அவரோடு இவர்களும் சேர்ந்துகொள்கிறார்கள். ‘ஜோம்பி’கள் யாரையாவது கடித்துவிட்டால், கடிபட்டவரும் ஜோம்பியாகிவிடுவார் என்பதால்தான் படத்திற்கு இந்தத் தலைப்பாம். நல்ல சிந்தனைதான். ஆனால், இந்தத் தலைப்பைத் தவிர, படத்தில் ஏதுமில்லை என்பதுதான் ஏமாற்றமளிக்கிறது.

இந்தப் படத்தில் அடல்ட் காமெடி படங்களுக்கென்றே உள்ள ஷாரா, தினேஷ், லிங்கா, சஞ்சிதா ஷெட்டி, சாய் தீனா, ஜெகன், மொட்டை ராஜேந்திரன், ஆனந்த் ராஜ், ஹரீஷ் பொராடி ஆகியோர் நடித்துள்ளனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com