சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சந்திப்பு

Share

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சந்தித்தார். இந்த சந்திப்பில் காங்கிரஸ், திமுகவின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றியை காங்கிரஸ் கட்சியினர், திமுகவினர் ஆகியோர் நேற்று முதல் பிரமாண்டமாக கொண்டாடிவருகின்றனர். ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிமுக வேட்பாளரை 66,233 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றதன் மூலம் 34 ஆண்டுகளுக்கு பிறகு எம்.எல்.ஏ.வாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சட்டமன்றத்திற்குள் நுழைய உள்ளார்.  இந்நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார். இந்த சந்திப்பின்போது காங்கிரசின் முக்கிய நிர்வாகிகள் கே.எஸ்.அழகிரி, கே.வீ.தங்கபாலு, செல்வப்பெருந்தகை, கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர். மேலும் திமுகவின் முக்கிய நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com