எமி மார்டினெஸ்: சறுக்கல்களை கடந்து ‘உலகின் சிறந்த கோல்கீப்பராக’ வளர்ந்த இளைஞன்

Share

எமி

பட மூலாதாரம், Getty Images

செப்டம்பர் 2020-இல் எமி மார்டினெஸ் ஆர்செனல் கிளப்பில் இருந்து ஆஸ்டன் வில்லாவில் சேர்ந்தபோது, அவர் தனது லாக்கரில் தனது இலக்குகளைக் கொண்ட பட்டியல் ஒன்றை லேமினேட் செய்து வைத்தார். உலகின் சிறந்த கோல் கீப்பராக மாற வேண்டும் என்பது அந்த இலக்குகளில் ஒன்று.

அந்த நேரத்தில், அவரது கிளப்பில் கூட நம்பர் ஒன் கீப்பராக இருந்திருக்காத ஒருவருக்கு அதுவொரு வியக்கத்தக்க, மிக உயர்ந்த, கிட்டத்தட்ட சாத்தியமற்ற இலக்காக இருந்திருக்கலாம்.

வில்லாவின் பாடிமூர் ஹீத் பயிற்சி மைதானத்தில் உள்ள அதே லாக்கர் இப்போது உலகக்கோப்பை, கோபா அமெரிக்கா ஆகியவற்றில் வென்ற பதக்கங்களால் நிரம்பியுள்ளது. மேலும் கத்தாரில் சிறந்த கோல் கீப்பராக இருந்ததற்காக கோல்டன் க்ளோவ் கோப்பை வழங்கப்பட்ட பிறகு, மார்டினெஸ் 2022 ஃபிஃபா விருதுகளில் தான் விரும்பிய தனிப்பட்ட முறையிலான பாராட்டையும் பெற்றுள்ளார். 2022ஆம் ஆண்டுக்கான ஃபிஃபாவின் சிறந்த கோல் கீப்பர் விருதை அவர் பெற்றார்.

வில்லாவில் நீண்ட காலமாக கோல் கீப்பிங் பயிற்சியாளராக இருக்கும் நீல் கட்லருடன் எமி மார்டினெஸ் மேற்கொண்ட பயணம் மிகவும் சிறப்பானது. நீல் கட்லர் அவரது நெருங்கிய நண்பராகவும் அதிகாரப்பூர்வமற்ற உளவியலாளராகவும் இருந்தார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com