`அக்ஸரோடு மூவரானோம்!’- மூவேந்தர்களாக அசத்தும் ஆல்ரவுண்டர் கூட்டணி; முன்வரிசை வீரர்கள் கவனத்திற்கு! | Ashwin – Jadeja – Axar All Rounder trio’s success journey

Share

ரிலே எனப்படும் தொடர் ஓட்டத்தில் முதலில் ஓடும் வீரர்கள் தவறவிடும் விநாடிகளை ஈடுகட்ட இறுதி வீரர் மூச்சிறைக்க ஓடவேண்டியிருக்கும். இங்கேயும் இதுதான் நடந்தேறுகிறது. லோயர் மிடில் ஆர்டர் மற்றும் டெய்ல் எண்டர்கள் சாதிக்கும் ஒவ்வொரு போட்டியும் அவர்களது திறனைக் கடைவிரித்தாலும் முன்வரிசை வீரர்களின் குறைபாடுகளையும் அது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. டாப் ஆர்டர், குறிப்பாக மிடில் ஆர்டர் தவறிழைப்பதாலேதான் பின்வரிசை, ஆட்டத்தைத் தங்கள் கைகளில் எடுக்க வேண்டிய சூழல் வருகிறது.

இதனாலேயே, “பிரதான பேட்ஸ்மேன்களின் வேலைதான் என்ன, பேட்டிங், பௌலிங் என அத்தனையையுமே ஆல்ரவுண்டர்கள் என்ற காரணத்திற்காக இவர்களே தலையில் போட்டுக்கொள்ள முடியுமா?” என்ற கேள்விகளும் கூடவே எழுகின்றன. வெறும் 115 ரன்கள் சேஸ் செய்யும்போதுகூட விக்கெட் இழப்பின்றி அதனை எட்டவேண்டுமென்ற மைண்ட்செட் இந்திய அணிக்குள் வரமறுக்கிறது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com