Kapil Dev: உலகக் கோப்பை மட்டுமா? வீரதீர கபில் தேவ் நிகழ்த்திய 5 அதி அற்புத சம்பவங்கள்! | Kapil Dev’s Top 5 Heroic Performances to remember

Share

4/90, 7/56 மற்றும் 84 ரன்கள் vs பாகிஸ்தான்:

1980-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் இரண்டு வெற்றிகள் பெற்றிருந்தது. பாகிஸ்தானிடம் இந்திய அணி ஒயிட்வாஷ் ஆகாமல் இருக்க ஒரு அசத்தலான ஆட்டம் தேவைப்பட்டது. அந்த அசத்தலான ஆட்டத்தை ஆடி இந்திய அணியின் மானத்தை மற்றுமொரு முறை காத்திருந்தார் கபில்.

முதல் இன்னிங்ஸில் கபில் தேவ் கரங்களால் நான்கு விக்கெட்டுகள் பெற்றுக் கொடுத்தார். இரண்டாவது இன்னிங்சிலும் ஏழு விக்கெட் எடுக்க மொத்தம் 11 விக்கெட்டுகளை ஒரே ஆட்டத்தில் எடுத்தார். பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாடி 38 பந்துகளில் 84 ரன்கள் விளாசினார் கபில். பேட்டிங், பௌலிங்கில் கபில் தன் பெஸ்ட்டைக் கொடுக்க இந்தியா பத்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தப் போட்டியை வென்றது. பாகிஸ்தானிடம் ஒயிட்வாஷ் ஆகாமலும் தப்பித்தது.

1992-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி அது. இரண்டாவது இன்னிங்ஸில் 27/5 என மோசமான நிலையில் இந்தியா ஆடிக் கொண்டிருந்தது. ஐந்தாவது வீரராக இந்திய அணியைக் காப்பாற்ற கபில் களம் இறங்கினார். Tail enders பேட்ஸ்மேன்களோடு கைகோத்து இந்திய அணியைச் சரிவிலிருந்து மீட்டு 129 ரன்கள் அடித்துக் கொடுத்தார். கபிலின் அதிரடியால் 215 ரன்கள் குவித்தது இந்தியா. 153 ரன்களைத் துரத்திய தென்னாப்பிரிக்கா எளிதாக வெற்றி பெற்றது. வெற்றியை இழந்தாலும் கபிலின் 129 ரன்கள் நாக் மறக்கமுடியாத ஓர் ஆட்டமாக மாறியது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com