தமிழ்நாடு தென்னை நார் தொழிற்சாலைகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் கிராமங்கள்

Share

  • பி சுதாகர்
  • பிபிசி தமிழுக்காக

தென்னை நார் தொழிற்சாலைகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் தமிழக கிராமங்கள்

தென்னை நார் மற்றும் நார்த்தூள்கள், மெத்தை, கைவினைப் பொருட்கள், விளையாட்டு மைதானத்திற்கும் கார்ப்பரேட் பண்ணைகளுக்கு உரமாகவும், பசுமைக்குடிலில் மண்ணின்றி காயர் பித்தை கொண்டு விவசாயம் செய்யவும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கவும் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்தத் தொழிற்சாலைகளில் நார்த்தூள்களை மூன்று முறை, புதிய நீர் கொண்டு உலர்த்துவதால் நிலம், நிலத்தடி நீர் மற்றும் காற்று மாசுடைந்து மக்கள் வசிக்க முடியாத பகுதியாக மாறி வருகிறது. மேலும், வாய்க்கால், ஆறுகளிலிருந்து இலவச மின்சாரத்தைப் பயன்படுத்தி விவசாயம் செய்யாமல் இதைச் செய்வதன் மூலம், வணிக நோக்கத்திற்காக தண்ணீர் திருட்டும் செய்துகொண்டிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

இது குறித்து பேசிய மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், கடந்த காலத்தில் அதிமுக அரசு நடவடிக்கை எடுக்காத போதும், தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

அத்துடன், “முதல் கட்டமாக விவசாய நிலங்கள் மற்றும் நிலத்தடி நீர் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தப்பட்டு முதலமைச்சர் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அதற்கான நடவடிக்கை எடுக்க பரிசீலிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் தலைமையில் வருவாய்த் துறையினர் மற்றும் மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் அடங்கிய ஆய்வுக் குழுவை அமைத்து, இந்த மாதத்திற்குள் ஆய்வு செய்யவுள்ளோம்,” என்றார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com