சென்னை ஓபன் சாலஞ்சர் தொடரில் சுமித் நாகல் கால் இறுதிக்கு முன்னேற்றம்

Share

சென்னை: சென்னை ஓபன் ஏடிபி சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 506-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சுமித் நாகல், 343-வது இடத்தில் உள்ள சீன தைபேவின் ஜேசன் ஜங்கை எதிர்த்து விளையாடினார்.

ஒரு மணி நேரம் 56 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சுமித் நாகல் 3-6, 6-2, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் கால் இறுதி சுற்றில் 313-ம் நிலை வீரரான கிரேட் பிரிட்டனின் ஜே கிளார்க்குடன் மோதுகிறார் சுமித் நாகல்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com