Doctor Vikatan: ஃப்ரோஸன் ஷோல்டர் மாதிரியே ‘லாக்டு நீ’ எனப்படும் முழங்கால் மூட்டு மற்றும் தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்டுள்ளேன். வலியோ, வீக்கமோ இல்லை. ஆனாலும் வேகமாக நடக்க முடிவதில்லை. முழங்காலை எளிதாக நீட்டி, சம்மணமிட்டு ஐந்து நிமிடங்கள்கூட தொடர்ந்து உட்கார முடியவில்லை. இதற்கு என்ன தீர்வு?
முனியா – மாடல், விகடன் இணையத்திலிருந்து.
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் ஏ.ஆர். கேசவன்
மூட்டுகளில் உள்ள குறுத்தெலும்புகள் நகரும்போது ஒன்றோடொன்று உராயாமலிருக்க அந்தப் பகுதியில் மூட்டு சவ்வில் இருந்து ஒருவித திரவம் சுரக்கும். இந்த சவ்வு வீங்கும்போதோ, குறுத்தெலும்பு சேதமாகி ஓட்டை விழும்போதோ, அதை தேய்மானம் என்கிறோம். அதனால் உராய்வு அதிகமாகிறது. அசைவு குறைகிறது. அதனால் கால்களை நீட்டி, மடக்குவது கடினமாகிறது.