* ஊசி மூலம் செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசியைவிட, நாசி வழியாகச் செலுத்தப்படும் இது பயனுள்ளதாக இருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
* ஊசி போடுவதால் வருகிற வலி இதில் கிடையாது.
* `லைவ் வாக்ஸின்’ என்றால், அதன் காரணமாகவே சளி, காய்ச்சல் வரலாம். இது ‘கில்டு வாக்ஸின்’ (killed vaccine) என்பதால், காய்ச்சல் வருவதற்கான வாய்ப்பு குறைவு என்று எதிர்பார்க்கப்படுகிறது.
* இந்தத் தடுப்பு மருந்தைச் செலுத்திக்கொள்வதற்கு முன்னரே, நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்து, நீண்டகால உடல் பிரச்னை, சரும அலர்ஜி, அனபலடிக் அலர்ஜி போன்ற உங்களுடைய மெடிக்கல் ஹிஸ்டரியை மருத்துவரிடம் தெரிவித்து விடுவது மிக மிக அவசியம்.
* கர்ப்பிணிகளுக்கு இந்த மருந்தைத் தரலாம் என்பதற்கான தரவு எதுவும் இல்லை.
* கொரோனா வைரஸின் திரிபுகளுக்கு ஏற்றபடி இந்தத் தடுப்பு மருந்து உருவாக்கப்படவில்லை.