கர்ப்ப காலத்தில் Rh இணக்கமின்மை; சிசுவுக்கு ஏற்படும் பாதிப்புகள் | பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 5 | Rh incompatibility during pregnancy

Share

கர்ப்ப காலத்தில் Rh இணக்கமின்மையைக் கண்டறியும் பரிசோதனைகள்:

மனைவியின் ரத்தப்பிரிவு நெகட்டிவ் எனில், கணவரின் ரத்தப் பிரிவை அறிய வேண்டும். அவரின் ரத்தப் பிரிவும் நெகட்டிவ் எனில், சிசுவின் ரத்தப் பிரிவும் நெகட்டிவ்வாகவே இருக்கும்; எனவே, Rh இணக்கமின்மை ஏற்படும் சாத்தியம் இல்லை. மாறாக, கணவரின் ரத்தப் பிரிவு பாசிட்டிவ்வாக இருப்பின், சிசுவின் ரத்தப் பிரிவும் பாசிட்டிவ்வாக இருப்பதற்கும், அதனால் Rh இணக்கமின்மை ஏற்படவும் சாத்தியக் கூறுகள் அதிகம். கணவரின் ரத்தப் பிரிவு பாசிட்டிவ்வாக இருப்பின், அவரின் மரபணுவைப் பரிசோதிப்பதன் மூலம், சிசுவின் ரத்தப் பிரிவு பாசிட்டிவ்வாக இருப்பதற்கு, எவ்வளவு சாத்தியமென்பதைத் துல்லியமாக அறிந்திட முடியும்.

ICT பரிசோதனை

ICT பரிசோதனை

கர்ப்ப காலத்தில், தாய்க்கு ஏற்கெனவே Rh இணக்கமின்மை ஏற்பட்டுவிட்டதா என்பதை, Indirect Coombs test (ICT) பரிசோதனை மூலம் கண்டறிய முடியும். ICT பரிசோதனை பாசிட்டிவ் எனில், தாயின் ரத்தத்தில் ஏற்கெனவே Rh IgG ஆன்டிபாடிகள் உள்ளதென அர்த்தம். ICT பரிசோதனை பாசிட்டிவ் எனில், தாயின் ரத்தத்திலுள்ள Cell–free fetal DNA (cff DNA)வை PCR பரிசோதனை மூலம் கண்டறிந்து, சிசுவின் ரத்தப் பிரிவு பாசிட்டிவ்வா அல்லது நெகட்டிவ்வா எனக் கண்டறிவோம். சிசுவின் ரத்தப் பிரிவு பாசிட்டிவ்வாக இருப்பது உறுதியானால், தாயின் ரத்தத்திலுள்ள Rh IgG ஆன்டிபாடிகளால் சிசுவின் ரத்தச் சிவப்பணுக்கள் சிதைவுறுதல் அபாயம் மிக அதிகம்.

எனவே, தாயின் ரத்தத்தில் எவ்வளவு Rh IgG ஆன்டிபாடிகள் உள்ளன என்பதை வாராவாரம் பரிசோதனைகள் மூலம் கண்டறிவோம். Rh IgG ஆன்டிபாடிகளின் அளவு <4 IU/mlஆக இருந்தால் சிசுவுக்கு பாதிப்புகள் ஏற்படாது. மாறாக, Rh IgG ஆன்டிபாடிகளின் அளவு 4 – 15 IU/ml ஆக இருந்தால், சிசுவுக்கு ரத்தச் சிவப்பணு சிதைவு நோய் (Hemolytic Disease of the Newborn) ஏற்படும் அபாயம் மிதமாகவும், அதுவே 15 IU/ml-க்கு மேலிருந்தால் சிசுவுக்கு ரத்தச் சிவப்பணு சிதைவு நோய் ஏற்படும் அபாயம் தீவிரமாகவும் இருக்கும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com