வீட்டில் கொடூரமாக இறந்து கிடந்த சிறுமி, பெற்றோர் கைது – என்ன நடந்தது ?

Share

கெய்லியா லூயிஸ் டிட்ஃபோர்ட், போவிஸ்ச் சிறுமி
படக்குறிப்பு,

கெய்லியா லூயிஸ் டிட்ஃபோர்ட்

’வேல்ஸின் போவிஸ் பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் தனது அறையின் படுக்கையிலேயே இறந்து கிடந்தார். அரிய வகை நோயினாலும், உடல் பருமனாலும் பாதிக்கப்பட்டிருந்த அவரது உடலை தூக்கும்போது அங்கே பூச்சிகள் மொய்த்தன, அவரது படுக்கையில் புழுக்கள் ஊறிக் கொண்டிருந்தன. அங்கே தாங்க முடியாத துர்நாற்றம் வீசியது. உணவு பொட்டலங்கள் அறை முழுவதும் சிதறிக்கிடந்தன. பிளாஸ்டிக் பால் பாட்டில்களில் சிறுநீர் இருந்தது. சுவர்களில் மலம் படிந்து கிடந்தது’.  


தனது மகளின் மரணித்திற்காக இப்போது அந்த பெற்றோர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.அழுக்கு நிறைந்த தனது படுக்கையில் மரணித்து கிடந்த அந்த சிறுமிக்கு உண்மையில் என்ன நிகழ்ந்தது தெரியுமா?

போவிஸ், நியூ டவுன் நகரைச் சேர்ந்த தம்பதியினர் ஆலன் டிட்ஃபோர்ட் மற்றும் சாரா லாய்ட் ஜோனஸ். இவர்களுடைய 16 வயது மகள் கெய்லியா லூயிஸ் டிட்ஃபோர்ட். இவர் பிறவியிலேயே ’ஸ்பைனா பிஃபிடா’ (spina bifida ) என்னும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். பிறக்கும் குழந்தைகளின் முதுகெலும்பு மற்றும் முதுகு தண்டுவட பகுதிகளில் ஏற்படும் ஒருவித பாதிப்பே ‘ஸ்பைனா பிஃபிடா’ என்னும் நோயாக அறியப்படுகிறது. இந்த நோயினால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு  இடுப்புக்கு கீழே அசைவதிலும், எழுந்து நடப்பதிலும் சிக்கல்கள் ஏற்படும். இந்த நோயினால் பாதிக்கப்பட்ட கெய்லியா லூயிஸ் டிட்ஃபோர்ட் நடப்பதற்கும், உடல் அசைவிற்கு வழியின்றியும் மிகவும் கவலைக்கிடமான நிலையில் வாழ்ந்து வந்தார்.


இந்த நிலையில் 2020ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி தனது மகள் படுக்கையிலிருந்து எழுந்திருக்கவில்லை என கெய்லியின் பெற்றோர்கள் அவசர உதவி சேவையை தொடர்பு கொண்டுள்ளனர். அவசர உதவி சேவையாளர்கள் அங்கு வந்த பின்புதான் கெய்லியா எவ்வளவு மோசமான நிலையில் அத்தனை ஆண்டுகள் வாழ்ந்து வந்தார் என்பது வெளியுலகிற்கு தெரிய வந்தது. 

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com