Doctor Vikatan: 20 + வயதிலேயே கரடுமுரடான, வயோதிக சருமம்… தீர்வுகள் உண்டா? | Doctor vikatan – aging skin in 20+ years.., any solutions?

Share

அளவுக்கதிமாக வெயிலில் அலையும்போது சருமத்தின் அடியில் உள்ள கொலாஜென் மற்றும் எலாஸ்டின் இழைகள் பாதிக்கப்படும். இவைதான் நம் சருமத்தை இளமையோடும், உறுதியோடும் வைத்திருப்பவை. சருமத் துவாரங்களைச் சுற்றியுள்ள கொலாஜென், எலாஸ்டின் குறைவதால் துவாரங்கள் திறந்ததுபோலத் தெரியும்.

சருமத்திலுள்ள கொலாஜெனையும் எலாஸ்டினையும் தூண்டிவிட சில சிகிச்சைகள் இருக்கின்றன. மைக்ரோ நீட்லிங், ரேடியோ ஃப்ரீக்வன்சி, ஸ்கின் டைட்டனிங் கார்பன் டை ஆக்ஸைடு லேசர், சருமத்துக்கு அடியில் போடப்படும் ஹைலுரானிக் ஊசி போன்றவை இதற்கு உதவும். அதன் மூலம் சருமத் துவாரங்கள் டைட் ஆகும்.

ஆயிலி சருமம்

ஆயிலி சருமம்

ரெட்டினால், சாலிசிலிக் அமிலம், கிளைகாலிக் அமிலம் கலந்த க்ரீம்கள் பயன்படுத்தினாலும் சருமத் துவாரங்கள் டைட் ஆகும். அதிகப்படியான வெயில், சூழல் மாசு, ஸ்ட்ரெஸ் காரணமாக சிலருக்கு சராசரியைவிட சீக்கிரமே சருமம் முதுமைத்தன்மையை அடையும். அவர்களுக்கு கொலாஜென் உற்பத்தி இருக்காது. எனவே இந்தக் காரணிகளைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். சரும மருத்துவரை அணுகி, உங்களுக்கான சரியான சிகிச்சைகளைக் கேட்டுப் பின்பற்றுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com