அலுவலக வேலை ஏன் சோர்வைத் தருகிறது? – பின்னணியில் உள்ள ஆபத்தான காரணம்

Share

அலுவலக வேலை ஏன் சோர்வை தருகிறது? - பின்னனியில் உள்ள ஆபத்தான காரணம்

பட மூலாதாரம், Getty Images

1970களின் முற்பகுதியில் பர்னவுட் (burnout) என்ற முற்றிலும் சோர்வடைந்த நிலையால் நீங்கள் அவதிப்படுவதாக யாரிடமாவது சொன்னால், சிலர் புருவங்களை உயர்த்தியிருக்கலாம்.



ஏனென்றால் இந்த வார்த்தை அதிகமாக போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் எதிர்கொள்ளும் பக்கவிளைவுகளை விவரிக்க அதிகாரப்பூர்வமற்ற முறையில் பயன்படுத்தப்பட்டு வந்தது.



எனினும், ஜெர்மன்-அமெரிக்க உளவியலாளர் ஹெர்பர்ட் ஃபிராய்டன்பெர்கர் 1974ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் போதைக்கு அடிமையானவர்கள் மற்றும் வீடற்றவர்களுக்கான மருத்துவமனையில் பர்னவுட் பிரச்னையை முதன்முதலில் கண்டறிந்தபோது, அதை போதைப்பொருள் பயன்படுத்துபவர்களுக்கான பிரச்னையாக சுருக்கிச் சிந்திக்கவில்லை.



அதிகப்படியான பணி காரணமாக அந்த மருத்துவமனையில் பணியாற்றிய தன்னார்வலர்களும் சிரமத்தை எதிர்கொண்டனர். பலர் தாழ்வு மனப்பான்மை அடைந்து உணர்ச்சிரீதியாக சோர்வடையத் தொடங்கினர். இதனால் தங்கள் நோயாளிகளிடம் அவர்களால் கவனம் செலுத்த முடியவில்லை.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com