லீனா மணிமேகலையின் ‘காளி’ சர்ச்சை போஸ்டர்: கைது செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை

Share

லீனா மணிமேகலை

பட மூலாதாரம், @LEENAMANIMEKALI

’காளி’ ஆவணப்பட சர்ச்சை போஸ்டர் தொடர்பான வழக்கில் இயக்குநர் லீனா மணிமேகலைக்கு எதிராக பிப்ரவரி மூன்றாம் வாரம் வரை கைது செய்வது உள்ளிட்ட எந்தவித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

என்ன சர்ச்சை?

இயக்குநர் லீனா மணிமேகலை, தான் இயக்கிய ’காளி’ எனும் நிகழ்த்து ஆவணப்படத்தின் போஸ்டரை கடந்த ஆண்டு ஜூலை 2ஆம் தேதி தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். 

அந்த போஸ்டரில் ‘காளி’ போன்று வேடமணிந்த பெண், தன் வாயில் சிகரெட்டுடன், கையில் பால்புதுமையினர் (LGBT) கொடியை பிடித்திருப்பது போன்று இருந்தது.

இந்த போஸ்டர் அந்த நேரத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அந்த போஸ்டர் “இந்து மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகக்” கூறி பல்வேறு தரப்பிலிருந்தும் அதற்குக் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. 

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com