வெனிலா கப் கேக் | Vanilla Cupcakes

Share

தேவையானவை:

மைதா மாவு – 1 கப்,
உப்பு – ஒரு சிட்டிகை,
வெண்ணெய் – ¼ கப்,
சர்க்கரை – ¾ கப்,
ஈஸ்ட் – ¼ டீஸ்பூன்,
வெனிலா எசன்ஸ் – ½ டீஸ்பூன்,
பால் – 2 டேபிள் ஸ்பூன்,
உலர்ந்த திராட்சை – 1 டேபிள் ஸ்பூன்,
நறுக்கிய செர்ரி பழம் – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

மைதா மாவு, உப்பு, இரண்டையும் சலித்து கலந்து கொள்ளவும். வெண்ணெய், சர்க்கரையை க்ரீம் பதம் வரும் வரை எலக்ட்ரிக் பீட்டரால் அடிக்கவும். இத்துடன் ஈஸ்ட், எசன்ஸ் சேர்த்து அடிக்கவும். பின் மைதா, பாலையும் சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும். உலர் திராட்சை, செர்ரி கலந்து கேக் கலவையை வெண்ணெய் தடவிய பேப்பர் கப்களில் பாதி ஊற்றி அவனில் 170 சென்டிகிரேடில் 20 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும். வெனிலா கப் கேக் ரெடி.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com