வால்பாறை: வரையாடுக்கு தொந்தரவு… சுற்றுலா பயணிகள் கைது!

Share

நீலகிரி வரையாடு தமிழ்நாட்டின் மாநில விலங்காகும். அழிந்து வரும் நிலையில் உள்ள வரையாட்டை பாதுகாக்க தமிழ்நாடு அரசு ரூ.25 கோடி ஒதுக்கியுள்ளது. முதுமலை புலிகள் காப்பகம், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வரையாடுகள் அதிகம் உள்ளன.

நீலகிரி வரையாடு

கோவை மாவட்டம் வால்பாறைக்கு செல்லும் மலைப்பாதையில் மேய்ச்சலுக்கு வரும் வரையாடுகளை பார்க்க முடியும்.

அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் சிலர் அமைதியாக சென்றாலும், சிலர் வரையாடுகளை தொந்தரவு செய்து வருகின்றனர். கொம்புகள், காதுகள், கால்களை பிடித்து இழுத்து புகைப்படம் எடுத்து வருகின்றனர்.

அதன்படி கடந்த சில நாள்களுக்கு வால்பாறைக்கு காரில் சென்ற சுற்றுலா பயணிகள் சிலர் ஒரு வரையாட்டை தொந்தரவு செய்வது போன்ற புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலானது.

வரையாடு

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர், கேரளாவைச் சேர்ந்த செல்டன் (40), ஜோபி ஆபிரகாம் ஆகியோரை கைது செய்தனர். “வனஉயிரின பாதுகாப்பு சட்டப்படி அட்டவணை 1-ல் உள்ள வரையாட்டை துன்புறுத்துவது வனக்குற்றம்.

மேலும் சுற்றுலா பயணிகள் வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகளுடன் புகைப்படம் எடுக்கக் கூடாது” என்று வனத்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com