இந்நிலையில் காரைக்கால் மாவட்டம், சேத்தூர் பகுதியில் சந்திரசேகரன் என்ற விவசாயி கரும்பின் மீதுள்ள ஈர்ப்பால் கடந்த 12 வருடங்களாக கரும்பு சாகுபடி செய்து வருகிறார். இந்த வருடம் இயற்கை முறையில் இரண்டு ஏக்கரில் இயற்கை உரங்கள் மற்றும் ஆட்டுப் புழுக்கை சாணம் போன்றவற்றைப் பயன்படுத்தி கரும்பு வளர்த்துள்ளார்.
இதன் காரணமாக இதுவரை இம்மாவட்டத்தில் இல்லாத அளவுக்கு கரும்பு சராசரியாக 10 அடி உயரம்வரை வளர்ந்துள்ளது. மேலும் கரும்பும் பெரும் சுவைமிக்கதாக இருப்பதால் இவரது கரும்புக்கு தற்போது பெரும் டிமாண்டு ஏற்பட்டுள்ளது.
கரும்பு விவசாயி சந்திரசேகரனிடம் பேசியபோது, “பாரம்பரிய முறையில் கரும்பு பயிரிட தேவையான இடுபொருட்கள், விதைகள் மானிய விலையில் அரசு வழங்க வேண்டும். பேரிடர் மற்றும் மழைக்காலங்களில் கரும்பு விவசாயம் பாதிக்கப்பட்டால் அரசு உரிய நிவாரணம் வழங்கவேண்டும்” என்றார்.