அமெரிக்காவில் உயிர் பலி வாங்கும் பனி: அதிகரிக்கும் மரணங்கள்

Share

US snow storm

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்கா மற்றும் கனடாவில் ஆர்க்டிக் உறைபனியின் தாக்கத்தால் இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் மட்டும் 34 பேர் பனிப்புயலுக்கு உயிரைப் பறிகொடுத்துள்ளனர். நியூயார்க் மாகாணத்தில் பஃபல்லோ நகரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள மெரிட் நகரில் பனிபடர்ந்த சாலையில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாயினர்.

பனிப்புயலின் தாக்கம் இதுவரை இல்லாத வகையில் கனடாவில் இருந்து வட அமெரிக்க கண்டத்தின் தென்கோடியில் உள்ள ரியோ கிராண்டே வரையிலும் காணப்படுகிறது.

அடுத்த சில நாட்களில் பனிப்புயலின் தாக்கம் குறையும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். எனினும், அத்தியாவசியம் அல்லாத பயணங்களை தவிர்க்குமாறு அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பனிப்புயலின் தாக்கம் சில நாட்கள் மிகவும் அதிகமாக இருந்தது. ஆனால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பல இடங்களிலும் மின்சார விநியோகம் சீரமைக்கப்பட்டுவிட்டது.

அசோசியேட்டர் பிரஸ் அளித்துள்ள தகவல்படி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நிலவரப்படி, 2 லட்சத்திற்கும் குறைவான வீடுகளில் மட்டுமே மின்சாரம் இல்லை. இது ஒரு கட்டத்தில் 17 லட்சம் என்கிற அளவில் உச்சத்தில் இருந்தது.

ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் லட்சக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாட முடியாமல் தவித்துப் போயினர்.

அமெரிக்காவில் 5.5 கோடி பேருக்கும் அதிகமானோர் வசிக்கும் பகுதிகள் இன்னும் கடுங்குளிர் எச்சரிக்கையின் கீழ் உள்ளன.

வளிமண்டல அழுத்தம் திடீரென குறைந்ததால் ஏற்பட்ட பனிப்புயல் எதிரொலியாக நிலவும் கடும் பனி, பலத்த காற்று காரணமாக அமெரிக்கா முழுவதும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

நியூயார்க் மாகாணம் ஹம்பர்க்கில் பனி மூடிக் கிடக்கும் வீடு மற்றும் கார்

பஃபல்லோ நகரை பூர்விகமாகக் கொண்ட நியூயார்க் மாகாண ஆளுநர் கேத் ஹோச்சுல், “பஃபல்லோ நகரின் மிக மோசமான பனிப்புயலாக இது வரலாற்றில் பதிவாகும்”, என்று கூறுகிறார்.

“சாலையின் இருபுறமும் கார்கள் முடங்கிக் கிடப்பதை பார்க்கும் போது ஏதே போர்க்களத்திற்குச் செல்வது போல இருக்கிறது” என்று செய்தியாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.

உயிருக்கே ஆபத்தான மிக மோசமான காலநிலை நிலவுவதால் மக்கள் தொடர்ந்து வீடுகளுக்கு உள்ளேயே இருக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com