`அடுத்தவங்க காசு நமக்கு எதுக்கு தம்பி?!’ – தவறி விழுந்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த கூலித்தொழிலாளி |news about the palanivel who was praised by police

Share

‘அவசர தேவைக்காக கொண்டு சென்ற பணம். பையோடு தொலைந்துவிட்டதே என்று வருத்தத்தில் இருந்தேன். ஆனால், பழனிவேல் அதை மீட்டுக் கொடுத்துட்டார்’ என்று பழனிவேலுக்கும், ஆய்வாளருக்கும் கைகூப்பி நன்றி தெரிவித்துவிட்டு, அந்த பையை நெஞ்சோடு அணைத்தபடி, வீட்டுக்குப் புறப்பட்டார் அர்ஜூனன். இதற்கிடையில், ஏழ்மையாக இருந்தும் அடுத்தவர் பணத்துக்கு ஆசைப்படாமல் அதை நேர்மையாகக் கொண்டுவந்து ஒப்படைத்த கூலித்தொழிலாளி பழனிவேலின் நல்ல மனதை ஆய்வாளர் வெகுவாக பாராட்டினார்.

இந்நிலையில், தனது நேர்மை குறித்து பலரும் பாராட்டுவதைக் கேட்ட பழனிவேல்,

“நானே கூலிவேலைப் பார்த்து வாழ்ந்துட்டு இருக்கேன். உழைக்குற காசே உடம்புல ஒட்டமாட்டேங்குது. இதுல, அடுத்தவங்க காசு நமக்கு எதுக்கு? அந்த காசை, அதுக்கு உரியவங்க என்ன அவசரத் தேவைக்காக எடுத்துட்டுப் போனாங்களோ? இந்தப் பணத்தை நான் வச்சுக்கிட்டா, அதனால் ஏற்படுற பாவத்தை நான் எந்த கோயிலுக்குப் போனாலும் போக்கிக்கொள்ள முடியாது. அதான், பையை எடுத்ததும் நேரா போலீஸ் ஸ்டேஷன்ல கொண்டுபோய் கொடுத்துட்டேன்” என்றார் அவரது நேர்மைக்கு ராயல் சல்யூட் வைக்கின்றனர் மக்கள்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com