டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்தின் முடிவுக்காக காத்திருக்கும் ஐ.சி.சி – இந்தியாவில் விளையாட மறுத்தால் என்ன நடக்கும்?
பட மூலாதாரம், Getty Images31 நிமிடங்களுக்கு முன்னர்வங்கதேச கிரிக்கெட் வாரியம், டி20 உலகக் கோப்பை போட்டிகளை இந்தியாவுக்கு வெளியே நடத்த வேண்டும் என்று விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்திருக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), போட்டிகள் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட இடங்களிலேயே நடைபெறும் என்று அறிவித்துள்ளது.இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு இடையிலான தற்போதைய பதற்ற நிலையைக் காரணமாகக் கொண்டு, பாதுகாப்பு காரணங்களுக்காக தங்களின் அணி பங்கேற்கும் டி20 உலகக் கோப்பை போட்டிகளை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று ஐசிசியிடம் வங்கதேசம்…









