Yearly Archives: 2026

Doctor Vikatan: எண்ணெய்க் குளியல் எடுக்கும் நாள்களில் அசைவம் சாப்பிடக் கூடாதா?

Doctor Vikatan: எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் நாள்களில் அசைவ உணவுகளையும் சைவத்திலுமே சில உணவுகளையும் சாப்பிடக் கூடாது என்கிறார்களே… அது உண்மையா…? எண்ணெய்க் குளியல் எடுக்கும் நாள்களில் இது போன்ற கட்டுப்பாடுகள் வேறு ஏதேனும் உண்டா… அவை வலியுறுத்தப்படுவதன் நோக்கம் என்ன? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் ‘மூலிகைமணி’ அபிராமி. சித்த மருத்துவர் அபிராமிஎண்ணெய் தேய்த்துக் குளிப்பது என்பது நமது உடலை ஆசுவாசப்படுத்தவும் (Relaxation), உடலின் உள் உறுப்புகளைச் சீரமைக்கவும் (Reset) மேற்கொள்ளப்படும் ஒரு செயலாகும். அந்த நாள்களில் உணவுக் கட்டுப்பாட்டையும்,…

இலங்கை: வங்காள விரிகுடாவில் புயல் உருவாகுமா? நிலவரம் என்ன?

பட மூலாதாரம், MET.DEPARTMENT (SRI LANKA)கட்டுரை தகவல்திட்வா புயலின் பாதிப்புகளில் இருந்து இலங்கை மக்கள் இன்னமும் மீண்டு வராத நிலையில், நாட்டில் மீண்டுமொரு அனர்த்தம் ஏற்படுவதற்கான சாத்தியம் எழுந்துள்ளதாக வானிலை அவதானிகள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.இலங்கையை அண்மித்துள்ள வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலைமை காரணமாகவே இந்த அனர்த்த அபாய நிலைமை ஏற்பட்டுள்ளது.தாழமுக்க நிலைமையானது, பொத்துவில் பகுதியில் இருந்து சுமார் 350 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க தெரிவிக்கின்றார்.அரசாங்க தகவல்…

'மத்திய அரசாங்கத்தின் பெயரைக்கூட சொல்ல விரும்பவில்லை; அது வேண்டாத அரசாங்கம்' – அமைச்சர் ஐ.பெரியசாமி

திண்டுக்கல், ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட சித்தையன் கோட்டை பேரூராட்சியில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பினை வழங்கினார்.பின் நிகழ்ச்சி மேடையில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது, “100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தை 125 நாள்களாக மத்திய அரசு அதிகரித்துள்ளது. நான் அமைச்சராகப் பொறுப்பேற்று 2023 – 24ல் தமிழ்நாட்டில் 41 கோடி நபர்களுக்கு 100 நாள் வேலை வாய்ப்பு கொடுக்கப்பட்டு, ரூ.13000 கோடி பணம் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது.தற்போது…

ஜன நாயகன் போல வெளியாகும் முன் சிக்கலை சந்தித்த 4 விஜய் திரைப்படங்கள் எவை?

பட மூலாதாரம், KVN PRODUCTIONSகட்டுரை தகவல்தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் கடைசி திரைப்படமாகக் கருதப்படும் ‘ஜன நாயகன்’ திரைப்படம், தணிக்கை தொடர்பான சிக்கல்களால் வெளியாகும் தேதி தள்ளிப் போடப்பட்டுள்ளது. இதுபோல, இதற்கு முன் வெளியாவதில் சிக்கல்களைச் சந்தித்த விஜயின் திரைப்படங்கள் எவை? என்ன காரணம்?ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்திருந்த ‘ஜன நாயகன்’ திரைப்படம் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சில திரையரங்குகளில் முன்பதிவுகளும் துவங்கப்பட்டன.ஆனால்,…

தகிக்கும் காரைக்குடி தம்பிகள்! சிதறும் வாக்குகள்…குஷியில் மதுரை தி.மு.க! | கழுகார் அப்டேட்ஸ் | kazhugar updates on mayor MLA issue and karaikkudi NTK issue

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் காரைக்குடி தொகுதியில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே எதிர்பார்ப்பில், ஒட்டுமொத்த கட்சி நிர்வாகிகளும் காரைக்குடியில் களமிறங்கி வேலையை ஆரம்பித்துவிட்டனர். ஆனால், உள்ளூரில் கோஷ்டி பூசல் களைக்கட்டுவதால் தடுமாறிப் போயிருக்கிறார்களாம் தம்பிகள். ‘மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருக்கும் இரண்டு பிரமுகர்களுக்கு இடையே, நீயா… நானா.. கோஷ்டி மோதல் உச்சமடைந்துள்ளது. மாவீரர் நாள் நிகழ்வுகளை, லோக்கலிலுள்ள கட்சி நிர்வாகிகள்தான் வழக்கமாக நடத்துவார்கள். ஆனால், காரைக்குடியிலுள்ள இரண்டு பிரமுகர்களும்…

டெல்லி ஃபைஸ்-இ-இலாஹி மசூதியை ஒட்டிய பகுதிகள் இடிக்கப்பட்டது ஏன்? மக்கள் என்ன சொல்கிறார்கள்?

படக்குறிப்பு, டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.கட்டுரை தகவல்டெல்லியில் உள்ள துர்க்மேன் கேட்டிற்கு அருகில் உள்ள ஃபைஸ்-இ-இலாஹி மசூதிக்கு அருகிலுள்ள ஆக்கிரமிப்புகள் நேற்றிரவு இடிக்கப்பட்டன. ஆக்கிரமிப்புகளை அகற்றும் இந்த நடவடிக்கை டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகு எடுக்கப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கையின் போது, உள்ளூர் மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீச வேண்டியிருந்தது.டெல்லி காவல்துறையின் மூத்த அதிகாரி நிதின் வல்சன், “சுமார் 25-30…

உதகையில் காயமடைந்து 2 நாட்களாக ஒரே இடத்தில் இருந்த புலிக்கு சிகிச்சை அளிக்காது ஏன்?

கட்டுரை தகவல்எழுதியவர், சேவியர் செல்வக்குமார்பதவி, பிபிசி தமிழ்7 ஜனவரி 2026, 13:36 GMTபுதுப்பிக்கப்பட்டது 8 நிமிடங்களுக்கு முன்னர்உதகை அருகில் காயத்துடன் தேயிலைத் தோட்டத்தில் இருந்த புலி, சிகிச்சை தரப்படாததால் உயிரிழந்தது. இயற்கையான நிகழ்வு என்பதன் அடிப்படையில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி, புலிக்கு சிகிச்சை அளிக்காமல் கண்காணித்து வந்ததாக வனத்துறை சார்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.புலிக்கு சிகிச்சை அளிக்காதது குறித்து, சமூக ஊடகங்களில் பலவிதமான விமர்சனங்களும் எழுந்து வருகிறது. இரு புலிகளுக்கு இடையில் நடந்த ‘ஏரியா’…

ஹேர் எக்ஸ்டென்ஷன் சிகிச்சைகள்… கூந்தலை வளர்க்குமா, பாதிக்குமா? | Hair extension procedures… do they promote hair growth or result in damage?

முதல் விஷயம், நீங்கள் செய்துகொள்கிற ஹேர் எக்ஸ்டென்ஷன் ரொம்பவும் இறுக்கமாக, அசௌகர்ய உணர்வைத் தருவதாக இருக்கக்கூடாது. கூந்தலுக்குப் போகிற ரத்த ஓட்டத்தைத் தொந்தரவு செய்யும்படி இருக்கக்கூடாது. சிலவகை ஹேர் எக்ஸ்டென்ஷன்கள்,  “ஸ்டிக் ஆன்’  டைப்பில், அதாவது ஒட்டி எடுக்கும் விதத்தில் வருகின்றன. அவற்றை உபயோகித்துவிட்டு, அகற்றும்போது, மண்டைப்பகுதியில் புண்கள், கட்டிகள் போன்றவை வரக்கூடாது. பயன்படுத்தப்படுகிற பசையானது தரமாக இருக்க வேண்டும். அலர்ஜியை ஏற்படுத்தக்கூடாது.சில வகை ஹேர் எக்ஸ்டென்ஷன்களில் குட்டிக்குட்டி மணிகள் போன்று முடியோடு சேர்த்துக் கோத்தது போல செய்யப்படும். அப்படிச் செய்யும்போது, அது உங்கள் முடியை இழுக்கும் படி இருக்கக்கூடாது. அப்படியிருந்தால்…

`அமித் ஷாவா, அவதூறுஷாவா? மக்களுக்கு விடப்பட்ட சுயமரியாதைக்கான சவால் இது..!' – மு.க.ஸ்டாலின்

திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காவேரி கூட்டுக் குடிநீர் திட்டம், விலையில்லா வீட்டு மனை பட்டா உட்பட ரூ.1549.90 கோடியிலான பல்வேறு நலத்திட்ட பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் பின் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழ்நாட்டிற்கு வந்தார். அவர் பேசும்போது தமிழ்நாடு அரசு இந்து சமய வழிபாடுகளுக்கு முடிவுகட்டும் வகையில் செயல்படுகிறது என்கிறார்.அவர் ‘அமித் ஷாவா அல்லது அவதூறுஷாவா’ என்று சந்தேகம் வருகிறது.…

1 140 141 142 143 144 146