இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம் பற்றி அமெரிக்காவின் அதிருப்தி என்ன?
பட மூலாதாரம், Press Information Bureau (PIB)/Anadolu via Getty Images2 மணி நேரங்களுக்கு முன்னர்இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா எதிர்வினையாற்றியுள்ளது.இந்தியாவும் ஐரோப்பாவும் இந்த வர்த்தக ஒப்பந்தத்தை ‘அனைத்து ஒப்பந்தங்களின் தாய்’ என்று அழைக்கின்றன.ஆனால் அமெரிக்க கருவூலத்துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட் இந்த ஒப்பந்தத்தை விமர்சித்துள்ளார்.சிஎன்பிசி செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், “அவர்கள் தங்களுக்கு எது சிறந்ததோ அதைச் செய்யட்டும். ஆனால் ஐரோப்பாவின் இந்த அணுகுமுறை எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது,” என்று…









