Ilaiyaraaja: "பவதாரிணியின் கடைசி ஆசை… இது உலகம் முழுதும் பரவும்" – இளையராஜா உருக்கம்!
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரிணி தனது 47வது வயதில் ‘25.2.2024’ம் தேதி காலமானார்.அவர் மறைந்து ஓராண்டாகியிருக்கும் நிலையில் பவதாரிணி நினைவாக அவரது பெயரில் சிறுமிகள் ஆர்கெஸ்ட்ரா குழு தொடங்கவுள்ளதாக இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்திருக்கிறார். நேற்று பிப் 12-ம் தேதி பவதாரிணியின் நினைவு நாள் நிகழ்வு நடைபெற்றது. இதில் இளையராஜா, கங்கை அமரன், கார்த்திக் ராஜா, வெங்கட் பிரபு என இளையராஜாவின் குடும்பத்தினர் பலரும் வந்திருந்தனர். பவதாரிணி பாடிய பாடல்கள் கச்சேரி நடத்தப்பட்டது. இளையராஜாஇவ்விழாவில் பேசியிருக்கும்…









