சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பும்ரா பங்கேற்பாரா? – இறுதி முடிவை இன்று எடுக்கிறது தேர்வுக்குழு | Selection committee to decide today on bumrah participating in champions trophy
அகமதாபாத்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா பங்கேற்பது குறித்த இறுதி முடிவை தேர்வுக்குழுவினர் இன்று (பிப். 11-ம் தேதி) எடுக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்தத் தொடரில் இந்திய அணி கலந்து கொள்ளும் ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடைபெற உள்ளது. மினி உலகக் கோப்பை கிரிக்கெட் என அழைக்கப்படும் இந்தத் தொடரில்…









