IND vs NZ: `வருண் ஒரு ரெட் டிராகன்’ – ஸ்பின்னர்களை வைத்து சண்டை செய்த இந்தியா; சரிந்த நியூசிலாந்து |India vs Newzealand – Match Report
‘வருண் சக்கரவர்த்தி மேஜிக்!’9 விக்கெட்டுகளை ஸ்பின்னர்களுக்கு எதிராகத்தான் நியூசிலாந்து இழந்திருந்தது. இந்த 9 விக்கெட்டுகளில் 7 விக்கெட்டுகள் lbw அல்லது போல்ட் முறையில் வந்திருந்தது. எனில், இந்திய ஸ்பின்னர்கள் அத்தனை டைட்டான லைன் & லெந்த்தில் வீசினார்கள் என புரிந்துகொள்ளலாம். தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி மட்டும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இதே துபாய் மைதானத்தில்தான் 2021 இல் அவரது கரியர் ஆரம்பிப்பதற்குள் முடிந்திருந்தது. ஐ.பி.எல் லிலும் உள்ளூர் போட்டிகளிலும் சிறப்பாக ஆடி மூன்று ஆண்டுகள் கழித்து…









